ETV Bharat / international

மோடியின் மாபெரும் தவறு, சுட்டிக்காட்டும் இம்ரான்

author img

By

Published : Feb 6, 2020, 12:01 AM IST

Imran
Imran

இஸ்லாமாபாத்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் வரலாற்றுப்பிழையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மாகாணத்தில் உள்ள சட்டப்பேரவையில் அந்நாட்டின் முதலமைச்சர் இம்ரான் கான் இன்று உரையாற்றினார். அந்த உரையின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இம்ரான்.

குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து பேசிய அவர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் பிழையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானை வைத்தே இந்தியாவில் அரசியல் நடத்தும் மோடி, மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற மிதப்பில் இத்தகைய பிழையை செய்துள்ளார் என மோடி அரசின் மீது நேரடிக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மோடி அரசின் இந்நடவடிக்கை இருநாட்டு உறவில் பெரும் பிளவை உருவாக்கியுள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மூன்று முறை விளக்கம் தெரிவித்துள்ளேன் எனவும் கூறினார்.

இதையும் படிங்க 'பலனளிக்குமா மத்திய அரசின் புதிய வரி விதிப்பு முறை?'

Intro:Body:

"வான்வழி கண்காணிப்பு"



விரைவில் பிரத்யேக செயற்கைகோள் ஏவுகிறது இந்திய ராணுவம்!!!





எல்லைக்கு வெளியில் இருந்து அச்சுறுத்தல்களை,ஊடுருவல்களை கண்காணிக்கவும், உள்நாட்டு பாதுகாப்பு பணிகளுக்கு உதவவும் இந்திய ராணுவம், அடுத்த கட்டமாக தனது பயன்பாட்டுக்காக பிரத்யேக செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது







விண்ணில் இருந்து தொலை தூரங்களில் உள்ள இடங்களை மிகத் தெளிவாக படம் பிடிக்கும் திறன் படைத்த இந்த செயற்கைகோள், இந்திய ராணுவத்துக்கு பேருதவியாக அமையும் எனவும் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக, இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.







ராணுவத்தின் தகவல் தொடர்பு, தொலை தூர கண்காணிப்பு மற்றும் வேவு பார்க்கும் பணிகளில் இந்த . செயற்கை கோள் முக்கிய பங்காற்றும். மேலும் ஆளில்லா விமானங்களின் நடமாட்டத்தையும் இந்த செயற்கை கோள் கண்காணிக்கும் என பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி  தெரிவித்துள்ளார்.







தமது தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்காகவும், ரகசியம் காக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் இந்த செயற்கைகோளை ராணுவம் பயன்படுத்த உள்ளது. இந்த செயற்கைகோளை ராணுவத்தின் சிக்னல இயக்குநரகம் கையாளும்.







வானில் இருந்து இந்தியாவின் எல்லையில் கண் வைக்கும் இந்த செயற்கை கோள், எல்லை தாண்டி வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை நமது ராணுவத்துக்கு எளிதில் காட்டிக் கொடுத்து விடும். மேசம் எல்லைப் பகுதியில் இந்தியப் படைகளை எங்கெங்கே குவிக்க வேண்டும் என்பதுடன் அவற்றின் நடமாட்டத்தையும் இந்த செயற்கை கோள் மூலம் எளிதில் கண்காணிக்க முடியும்.



எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய ராணுவ முகாம்கள் மற்றும் பதற்றமான பகுதிகளையும் இந்த செயற்கை கோள் கண்காணிக்கும்.







தற்போதைக்கு இந்தியாவின் 55 செயற்கை கோள்கள் விண்ணில் சுற்றி வருகின்றன. இதில் 8 முதல் 10 செயற்கைகோள்கள் ராணுவத்துக்கு பயன்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் ராணுவத்துக்கென பிரத்யேக செயற்கை கோள்கள் பல ஏவப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.







தற்போது வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 34 நாடுகளின் 327 செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இதில் கடந்த 2017 பிப்ரவரி 15-ல் 104 செயற்கை கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி 37 திட்டம் மிகப் பெரிய சாதனையாகும்.







கடந்த 2019 நவம்பரில் ஏவப்பட்ட கார்டோ சாட் - 3 செயற்கை கோள், விண்ணில் 500 கி.மீ. அப்பால் இருந்து, பூமிப் பரப்பில் உள்ள 25 செ.மீ. அளவுக்கும் குறைவான சிறு பொருட்களைக் கூட துல்லியமாக படம் பிடிக்கும் திறன் படைத்தது. இதுவே இந்திய செயற்கை கோள் படைத்த அரிய சாதனை.





கடந்தாண்டு ஏப்ரலில் இஸ்ரோ ஏவிய எமி சாட் செயற்கை கோள், பூமியின் பரப்பில் மின்னணு சமிக்ஞைகளை துல்லியமாக கண்டறியும் திறன் படைத்தது. இதன் மூலம் எதிரிகளின் ரேடார் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் இதன் கண்ணில் இருந்து தப்ப முடியாது. மற்றொரு செயற்கை கோளான மைக்ரோசாட் ஆர் இரவிலும் தெளிவாக படம் பிடிக்கக் கூடியது.







இந்திய கடற்படையும் ஏற்கனவே தனது பயன்பாட்டிற்காக ருக்மினி என்ற பெயரிலான  செயற்கைகோளை ஆகஸ்ட் 2013ல் செலுத்திய நிலையில், இந்திய விமானப்படையும் ஜிசாட்-7 ஏ என்ற செயற்கைகோளை 2018 டிசம்பரில் ஏவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.







இதே போல் மத்திய உள்துறை அமைச்சகமும் சொந்தமாக செயற்கைகோளை ஏவுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை(BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை ( CRPF) போன்ற தன் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப் படைகளுக்கு உதவும் வகையில் இந்த செயற்கை கோள் ஏவும் திட்டத்தில் உள்ளது. தீவிரவாதம், ஆயுதம் ஏந்தி போராடும் தீவிர இடதுசாரி நக்சல் இயக்கங்களை வேட்டையாட செயற்கை கோள் பேருதவியாக இருக்கும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் பரிந்துரை செய்யப்பட்டதின் பேரில் நீண்ட காலம் செயல்படக்கூடிய செயற்கைக் கோளை ஏவுவது குறித்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.







இப்படி ராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்கை கோள்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தப்படும் பட்சத்தில், இந்தியாவின் 24,600 கோடி ரூபாய் மதிப்பிலான லட்சிய திட்டமான NFS எனப்படும் ஸ்பெக்ட்ரம் நெட்வொர்க் திட்டத்தின் லட்சியம் நிறைவேறும். இதன் பிரதான நோக்கமான நாட்டின் பல்வேறு படைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பில் அதி முக்கிய உளவுத் தகவல்கள் மற்றும் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.





குரல் பரிமாற்றம், வீடியோ மற்றும் முக்கிய தகவல்கள் பரிமாற்றம் போன்றவற்றில் மட்டுமின்றி இந்த ஸ்பெக்ரம் நெட்வொர்க் திட்டமானது அடுத்த தலைமுறைக்கான தகவல் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் என அனைத்து பயன்பாடுகளையும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைக்கும் என்பது நிச்சயம்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.