பிரான்ஸின் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை கெடுத்த அமெரிக்கா... கடுப்பான பிரான்ஸ்

author img

By

Published : Sep 20, 2021, 5:13 PM IST

France's Macron to talk to Biden amid crisis over submarines
பிரான்ஸின் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை கெடுத்த அமெரிக்கா...கடுப்பான பிரான்ஸ் ()

பிரான்ஸுடன் மேற்கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா, அமெரிக்காவடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்துள்ளது.

பாரிஸ்: அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை கடந்த வாரத்தில் அறிவித்தன.

இந்தக் கூட்டமைப்பின் அடிப்படையில், அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட 8 நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தச் செயல் பிரான்ஸ் அரசாங்கத்தை கோபமடையச் செய்துள்ளது. டீசல் மற்றும் மின்சாரத்தில் செயல்படும் 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க 66 பில்லியன் டாலர் மதிப்பில் பிரான்ஸுடன் ஆஸ்திரேலியா கடந்த 2016ஆம் ஆண்டே ஒப்பந்தம் செய்திருந்தது.

அந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் காரணமாக, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்களது நாட்டு தூதர்களை பிரான்ஸ் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் ஐரோப்ப நாடுகளே தங்களது மேலாண்மையை நிலைநாட்டிவந்தன. அண்மைக் காலத்தில் இந்த பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சி ஒரு அச்சத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்து.

சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்தி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவும் முயற்சியாக அமெரிக்கா ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக ஜோ பைடனுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் விரைவில் பேசுவார் எனவும், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது தொடர்பாக விளக்கம் கேட்பார் என்றும் அந்நாட்டு உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காபூல் தாக்குதல் பெரும் தவறு - பகிரங்க மன்னிப்புக் கேட்ட அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.