ETV Bharat / international

உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 14, 2020, 4:52 AM IST

chinese-military-calls-us-biggest-threat-to-world-peace
chinese-military-calls-us-biggest-threat-to-world-peace

பெய்ஜிங்: சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என சீன பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சீன ராணுவ முன்னேற்றங்கள் மற்றும் குறிக்கோள்கள் குறித்த ஆண்டு அறிக்கையை செப்டம்பர் இரண்டாம் தேதி அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிக்கையை வெளியிட்டது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வு கியான் கூறுகையில், "இந்த அறிக்கையை சீனாவின் நோக்கங்கள், மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் சீனாவின் 1.4 மில்லியன் மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் "விரும்பத்தகாத விலகல்".

பிராந்திய அமைதியின்மையைத் தூண்டுவது, சர்வதேச ஒழுங்கை மீறுவது மற்றும் உலக அமைதியை அழிப்பது அமெரிக்காதான் என்பதை பல ஆண்டு சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

அமெரிக்கா தன்னைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, சீனாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டுமானம் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டது. சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டுமானத்தை வெளிப்படை மற்றும் பகுத்தறிவுடன் பார்க்க அமெரிக்காவை அழைக்கிறோம். தவறான அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்தி, இருதரப்பு ராணுவ உறவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

பாதுகாப்புத் துறை அறிக்கையின் தொழில்நுட்ப திறன்கள், கோட்பாடுகள் மற்றும் சீனாவின் ராணுவ கட்டமைப்பின் இறுதி நோக்கங்களை ஆய்வு செய்து, பெய்ஜிங்கின் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுப்பதில் தீவிரமான பங்கைக் கொண்டுள்ள சீனாவின் புள்ளிவிவரத்தினை நடைமுறைக் கருவியாக மாற்றுவதும், சர்வதேச ஒழுங்கின் அம்சங்களைத் திருத்துவதையும் நோக்கமாகக் கொண்டது எங்களது பாதுகாப்பு அமைச்சகம்.

அமெரிக்க தேசிய நலன்களுக்கும், சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். அமெரிக்காவின் நட்பு நாடான தைவானை எதிர்க்கும் சீனா, தனது பிரதேசத்தின் ஒரு பகுதியை தேவைப்பட்டால் ராணுவ பலத்தால் இணைக்கும். இருப்பினும், தைவானின் எந்தவொரு படையெடுப்பும் சிக்கலானது மற்றும் பெரிய அரசியல் அபாயங்களைக் கொண்டிருக்கும்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ராணுவமாக சீன மாறிவருகிறது. சீனாவிடம் தற்போது 350 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அமெரிக்காவைப்போல சீனாவும் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் ஆயுத களஞ்சியத்தை கணிசமான அளவு உருவாக்கியுள்ளது.

வர்த்தகம், தொழில்நுட்பம், தைவான், மனித உரிமைகள் மற்றும் தென் சீனக் கடல் தொடர்பான பிரச்னைகளுக்கு மத்தியில் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக இந்த ஆண்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.