ETV Bharat / international

'இந்தியாவுடன் சேர்ந்து சீனாவை சமாளிப்போம்' - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

author img

By

Published : Jun 1, 2020, 5:16 PM IST

வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டுசேர்ந்து, சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிப்போம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

pompeo
pompeo

லடாக்கில் உள்ள லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனப்படும் இந்திய - சீன எல்லைப் பகுதியில், இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவி வருகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்திய அரசு, சீனாவுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "இதுபோன்ற முயற்சிகளில் சீன கம்யூனிச கட்சி நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. களநிலவரம் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் போது அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.

இந்த அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை முயன்று வருகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிப்போம்" என்றார்.

இதையும் படிங்க : வாஷிங்டனில் மீண்டும் ஊரடங்கு: காரணம் கரோனா அல்ல

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.