ETV Bharat / international

'பொது மக்களுக்கு நேரடியாக அதிகளவில் பணம் கொடுக்க வேண்டும்'

author img

By

Published : Jul 26, 2020, 3:37 PM IST

Musk tweet
Musk tweet

வாஷிங்டன்: பண புழக்கத்தை அதிகரிக்க பொது மக்களுக்கு நேரடியாக அதிகளவில் பணம் கொடுக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தனது புதிய உற்பத்தி ஆலையை தொடங்கிய டெஸ்லா நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க், "அரசின் மற்றொரு பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பு என்பது மக்களின் நலன்களுக்கு உகந்ததாக இருக்காது என்பதே எனது கருத்து. தற்போதுள்ள சிக்கலான நிலையில், பொது மக்களுக்கு நேரடியாக அதிகளவில் பணம் அளிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெக்க இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ட்ரம்ப் அறிவித்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் 1,200 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது. அதேபோல மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் நபர்களுக்கு தலா 500 டாலர்கள் வழங்கப்பட்டது.

Musk tweet
எலான் மஸ்க் ட்வீட்

இந்நிலையில், இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பின் கீழ் பொதுமக்களுக்கு தலா 1,200 டாலர்களை வழங்க வெள்ளை மாளிகை ஆலோசித்துவருவதாக சிஎன்பிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ள புதிய தொழிற்சாலைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்திருந்தார். சைபர்டிரக், மாடல் Y, மாசல் X, மாடல் 3 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படும் இந்தத் தொழிற்சாலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய டெஸ்லா திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவின் இடத்தை இந்தியாவால் நிரப்ப முடியும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.