வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

author img

By

Published : Sep 24, 2021, 11:06 PM IST

Updated : Sep 25, 2021, 7:24 AM IST

Modi Biden vow to enhance India US ties

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று நம்பப்படுகிறது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார்.

இந்தநிலையில், தற்போது அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அவருடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த சந்திப்பின்போது, "நான்கு மில்லியன் இந்திய-அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவை வலிமைப்படுத்துகிறார்கள். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மிகப்பெரியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், வலுவாகவும் நெருக்கமாகவும் இருக்கிறது" என்று பைடன் மோடியிடம் கூறினார்.

முன்னதாக இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தபோது, இந்திய அரசாங்கத்தில் மூத்த அலுவலராக இருந்த அவருடைய தாத்தா தொடர்பான பழைய நினைவின் நகலாக, ஒரு மரக் கைவினைச் சட்டத்தில் செய்யப்பட்ட ‘மீனாகரி’ சதுரங்கப் பலகை பொருட்களை (Chess set) பரிசளித்தார்.

இதையும் படிங்க: பண்டைய கடலின் முதல் நிலை வேட்டை அரசன் மெகாலோடன்

Last Updated :Sep 25, 2021, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.