ETV Bharat / international

ஃபேஸ்புக் 'Meta' எனப் பெயர் மாற்றம்!

author img

By

Published : Oct 29, 2021, 12:30 PM IST

Updated : Oct 29, 2021, 4:21 PM IST

Facebook
Facebook

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்திவருகின்றனர்.

சான்பிரான்சிஸ்கோ : ஃபேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை வியாழக்கிழமை (அக்.28) "மெட்டா" என்று மாற்றியது. இது நிறுவனத்தின் எதிர்கால முன்னோக்கு திட்டமிடல் முயற்சி ஆகும்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஃபேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து சமீபத்தில் 10 ஆயிரம் பேர்களை, மெட்டாவெர்ஸ் பணிக்கு அமர்த்த இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வருடாந்திர கூட்டத்தின்போது, “சமூகப் பிரச்சினைகளுடன் போராடி, நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், இப்போது கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்க உதவுவதற்கான நேரம் இது” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் நிறுவனத்தின் பெயர்தான் மெட்டா என்று மாறியிருக்கிறது. மற்றபடி சமூக வலைதளமான ஃபேஸ்புக் அதே பெயரிலேயேதான் தொடர்ந்து இயங்கும்.

இதையும் படிங்க : ஆர்பிஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!

Last Updated :Oct 29, 2021, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.