சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம், லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார்.
-
#WATCH | Kerala: Fans throng Sree Padmanabha Theatre in Thiruvananthapuram to watch the early morning show of Tamil actor Vijay's film 'Leo'. pic.twitter.com/76nIIbWGHP
— ANI (@ANI) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Kerala: Fans throng Sree Padmanabha Theatre in Thiruvananthapuram to watch the early morning show of Tamil actor Vijay's film 'Leo'. pic.twitter.com/76nIIbWGHP
— ANI (@ANI) October 19, 2023#WATCH | Kerala: Fans throng Sree Padmanabha Theatre in Thiruvananthapuram to watch the early morning show of Tamil actor Vijay's film 'Leo'. pic.twitter.com/76nIIbWGHP
— ANI (@ANI) October 19, 2023
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்படம் இன்று (அக்.19) வெளியாகி உள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் காலை 9 மணி முதலே காட்சிகளுக்கு அனுமதி என்பதால், ரசிகர்கள் திரையரங்க வாயிலில் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றனர். ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் காலை 4 மணிக்கே லியோ வெளியானது.
இதனைப் பார்த்த ரசிகர்கள், X, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். முக்கியமாக, லியோ திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் (LCU) இணையுமா என்ற கேள்விக்கான பதிலையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, நேற்று இரவு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், லியோ திரைப்படம் LCU-வில் இணையுமா என்பதற்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரியும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும், அதில் நடிகர் விஜய்க்கு நன்றியையும் லோகேஷ் தெரிவித்து இருந்தார்.
லியோ திரைப்படத்திற்கான அதிகாலை காட்சிகளுக்காக படத் தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகிய இரு தரப்பிலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல், காலை 9 மணி முதல் காட்சிகள் தொடங்கி, நள்ளிரவு 1.30 மணிக்கு காட்சிகள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான், இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் லியோ வெளியாக உள்ளது. மேலும், மிக முக்கியமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் நேற்று மாலை நேரத்தில்தான் டிக்கெட் கொடுக்கப்பட்டது.
அதிலும், காட்சிகள் இன்று மதியம் 12 மணிக முதலே தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், மற்ற மாநிலங்களில் லியோ பட வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Leo advance booking: 16 லட்சம் டிக்கெட் விற்று ஜவான் சாதனையை முறியடித்த லியோ!