ETV Bharat / entertainment

'ஜவான்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..! அட்டகாச தோற்றத்தில் ஷாருக்... நம்ம அட்லீ படமா இது!

author img

By

Published : Jul 10, 2023, 12:27 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் ரசிகர்கள், அவரது மாபெரும் வெற்றிப் படமான பதானுக்குப் பிறகு ஜவான் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும் இந்த நிலையில், ஷாருக், இன்ஸ்டாகிராமில், ஜவான் படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன.

Jawan prevue: Shah Rukh Khan takes action one notch higher with Atlee's action thriller
‘ஜவான்’ படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு..! அட்டகாச தோற்றத்தில் ஷாரூக்...நம்ம அட்லீ படமா இது!

ஹைதராபாத்: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பதான்' திரைப்படம் வெற்றி அடைந்த நிலையில், அவரின் அடுத்த படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தனது ரசிகர்களுக்காக, பெரிதும் எதிர்பார்க்கப்படும், ஜவான் படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது, அவரது சொந்த தயாரிப்புக்குழு. இரண்டு நிமிடங்கள் கால அளவிலான இந்த டீஸரில், ஷாருக்கான் தனது ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.

ஷாருக்கானின் ரசிகர்கள் அவரது அடுத்த திரைப்படமான ஜவான் பற்றிய அனைத்து செய்திகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் ட்விட்டரில் ஒரு ஆஸ்க் மீ ஆன்சர்(AskMeAnswer) அமர்வின் போது, ​​படம் தொடர்பான சில ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் ஷாருக்கான் பதிலளித்ததோடு மட்டுமல்லாது, படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

உதாரணமாக, ஒரு ரசிகர், "வணக்கம் ஷாருக், இன்று மாலை உங்கள் திட்டங்கள் என்ன? #AskSRK" என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த ஷாருக் கான், "ஜவான் படத்தை அட்லீயுடன் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில் நெட்டிசன்களால் வைரல் ஆகி வருகிறது.

படத்தின் இயக்குநர் அட்லீ, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்சன்களில், முன்னோட்ட வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஷாருக் கானின் அசத்தலான டபுள் ஆக்சன் ரோல், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம் மற்றும் வில்லன் விஜய் சேதுபதியின் ஆக்ரோஷமான நடிப்பு உள்ளிட்டவை அடங்கிய அசத்தலான காம்போ ஆக, இந்த முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ட்ரெய்லரில் இடம்பெற்று உள்ள வசனங்களை கேட்கும்போது படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு மாஸ் தெறிக்கும் வசனங்கள், இது அட்லீ படம் தானா, என்ற ஆச்சரியத்தை, பார்த்தவர்களுக்குள் ஏற்படுத்தி உள்ளன.

'இது வெறும் ஆரம்பம் தான் இனிமே தான் ஆட்டமே'

'நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா, எந்த ஹீரோவும் என் முன்னாடி நிக்க முடியாது ராஜா' உள்ளிட்ட வசனங்கள், வரும் நாட்களில், மீம்ஸ்களாகவோ, ரீல்ஸ்களாகவோ, சமூக வலைதளங்களைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இந்தப் படம், வசூலில் மிகப்பெரிய சாதனையினை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Samantha: "கடினமான ஆறு மாதங்கள்" வைரலாகும் நடிகை சமந்தாவின் செல்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.