ETV Bharat / entertainment

பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படம்

author img

By

Published : Oct 4, 2022, 10:52 AM IST

பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படம்...!
பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படம்...!

தென் கொரியாவின் பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் அப்படத்திற்கு கிடைக்கவிருக்கிறது.

பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படம்...!
பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ திரைப்படம்...!

அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ’விக்ரம்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்கள் கலாய்த்து தள்ளும் 'ஆதி புருஷ்' டீஸர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.