ETV Bharat / entertainment

Varisu OTT Release: விஜயின் வாரிசு ஓடிடி வெளியீட்டு தேதி வெளியீடு!

author img

By

Published : Feb 17, 2023, 12:38 PM IST

Updated : Feb 17, 2023, 12:50 PM IST

Etv Bharat
Etv Bharat

விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். வம்சி இதற்கு முன் தமிழில் நடிகர் கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் என்றதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். தமன் இசை அமைத்திருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷ்யாம் , பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 11-ம் தேதி வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு உலகம் முழுவதும் இதுவரை ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்தபோதும் இன்று வரை நிறைய திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 22ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. வெளிநாடுகளில் துணிவு திரைப்படம் மிகவும் ரசிக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் தளத்தில் முதலிடம் பிடித்தது. வாரிசு திரைப்படமும் அதே போன்று சாதனை படைக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

Last Updated :Feb 17, 2023, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.