ETV Bharat / entertainment

வாரிசு, துணிவு படங்களின் முன்பதிவு தொடங்கியது

author img

By

Published : Jan 8, 2023, 2:10 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

வாரிசு மற்றும் துணிவு முன்பதிவு
வாரிசு மற்றும் துணிவு முன்பதிவு

சென்னை: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வெளியாக உள்ளது. இருவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படங்களின் முன்பதிவு இன்று (ஜன 8) தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

வாரிசு முன்பதிவு
வாரிசு முன்பதிவு

இரண்டு படங்களுக்கும் சரிசமமான‌ திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. துணிவு படத்துக்கு அதிகாலை 1 மணிக்கு முதல் காட்சியும், வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சியும் திரையிடப்பட உள்ளது. ரசிகர்களின் இடையே மோதல்போக்கை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணிவு முன்பதிவு
துணிவு முன்பதிவு

ரூ‌.300 வரை டிக்கெட் கண்டனம் இணையத்தில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும் ரசிகர் காட்சிக்கு ரூ.3,000 வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து படங்களுக்கும் இதுபோன்று நடைபெறும் என்றாலும் இரண்டு உச்ச நடிகர்களின் படங்களும் வெளியாவதால் டிக்கெட் விலை அதிகரித்துக் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'Money..Money..Money' ரூபாய் நோட்டு வடிவில் டிக்கெட்.! கலக்கும் அஜித் ரசிகர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.