ETV Bharat / entertainment

உதயநிதி நடிக்கும் ‘கலகத் தலைவன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

author img

By

Published : Jul 26, 2022, 4:35 PM IST

உதயநிதி நடிக்கும் ‘கலகத் தலைவன்’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு
உதயநிதி நடிக்கும் ‘கலகத் தலைவன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத் தலைவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ’நெஞ்சுக்கு நீதி’. இப்படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஆர்டிகில் 15’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வந்தார்.

இப்படம் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது‌‌. மேலும் படத்திற்கு ’கலகத் தலைவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கமல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.