நெட்டிசன் கிண்டலுக்கு உள்ளான டாப் ஸ்டார் பிரசாந்த் படம்!

author img

By

Published : Jan 20, 2023, 6:25 PM IST

நெட்டிசன்களிடம் கிண்டலுக்கு உள்ளான டாப் ஸ்டார் பிரசாந்த் படம்!

ஒவ்வொரு பண்டிகைக்கும் 'அந்தகன்' படக்குழுவிடம் இருந்து வாழ்த்துகள் மட்டும் மறக்காமல் வருவதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு அந்தகன் திரைப்படம் உள்ளாகி வருகிறது.

சென்னை: பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'அந்தாதூன்'. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றி, தனது மகன் பிரஷாந்தை வைத்து 'அந்தகன்' என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை பிரஷாந்த்தின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் தயாரித்து இயக்கியும் உள்ளார். இப்படத்தில் சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

ஆனால், அதன் பிறகு படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. அவ்வப்போது பாடல் வெளியீடு குறித்த தகவல்கள் வரும். ஆனால், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில் ஒவ்வொரு பண்டிகைக்கும் படக்குழுவிடம் இருந்து வாழ்த்துகள் மட்டும் மறக்காமல் வந்துவிடும்.

கடந்த ஆண்டு ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், இந்த ஆண்டு நியூ இயர், பொங்கல் என அனைத்து பண்டிகைக்கும் படக்குழுவிடம் இருந்து வாழ்த்து செய்தி மறக்காமல் வந்து விட்டது. இதை பார்த்த நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். குறிப்பாக, படம் வெளியாகிறதோ இல்லையோ வாழ்த்து மட்டும் தவறாமல் வந்துவிடுகிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரீ- என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி - 'பழனிச்சாமி வாத்தியார்' படம் பூஜையுடன் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.