ETV Bharat / entertainment

ரியோ ராஜின் 'தோட்டா' ஆல்பம் பாடல் வெளியீடு

author img

By

Published : May 1, 2022, 6:58 PM IST

r
r

சென்னையில் 'Noise and Grains' நிறுவனத் தயாரிப்பில் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'தோட்டா' ஆல்பம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘Noise and Grains’ என்னும் நிறுவனம், புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ‘Noise and Grains’ தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் 'கண்ணம்மா என்னம்மா' ஆல்பம் பாடலின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் 'தோட்டா'. இப்பாடலை பிரேம்ஜி, நித்யஶ்ரீ பாடியுள்ளனர்.

“தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு
“தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு

இப்பாடலில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ளார். நேற்று (ஏப்.30) இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரைப் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் ஆல்ப பாடல் குழுவினருடன் பிக்பாஸ் புகழ் ராஜு, அபிராமி, ஜூலி, சக்ரவர்த்தி, கேப்ரியல்லா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அப்போது, நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ராஜூ பேசுகையில்,

'நானும் ரியோவும் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் எப்போதும் சின்ஸியராக இருப்பார். அவர் ரொம்பவும் திறமைசாலி. இந்தப் பாடலில் நடனம் அற்புதமாக இருந்தது. ரம்யாவின் ரசிகன் நான், அவருக்காகவே பலமுறை பாடல் பார்த்தேன். திரைப்பட பாடல் வெளியீட்டு விழா தான் இவ்வளவு பெரிதாக நடக்கும். இந்தப் பாடலுக்கு நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ரியோவுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்' என்றார்.

“தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு
“தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு

நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது,

“கண்ணம்மா பாடல் ஒரு மொட்டை மாடியில் எதேச்சையாக உருவானது. அது மிகப்பெரிய ஹிட்டானது. இந்தப் பாடல் பற்றி ‘Noise and Grains’ குழுவிடம் தெரிவித்தவுடன் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு தான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். மாதேஷ் மாணிக்கம் பெரிய பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர். எங்கள் டீமில் அவர் மட்டும் தான் பெரிய ஆள். அவர் இந்தப் பாடலை எடுத்து கொடுத்ததற்கு நன்றி. பிரிட்டோ மிக அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் இன்னும் பெரிதாக வளர்வார். பிக்பாஸில் சண்டை போட்டுக்கொண்டாலும் நானும் ரம்யாவும் நண்பர்கள். அவர், இதில் நடித்தது மகிழ்ச்சி. எங்களை பாராட்ட வந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

“தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு
“தோட்டா” ஆல்பம் பாடல் வெளியீடு

நடிகை ரம்யா பாண்டியன் பேசியதாவது,

“நான் இதுவரை எந்த ஆல்பம் பாடலிலும் நடித்ததில்லை. பிரிட்டோ சொன்ன ஐடியா பிடித்திருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். இந்த டீம் ஜாலியான டீம். இந்தப் பாடலில் வேலை பார்த்த அனுபவம் மிக சந்தோசமாக இருக்கிறது. இந்தப் பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்ஸ்டாகிராம் ரீல்-ஸில் (Reels) எங்கள் நடனத்தை ஆடி இப்பாடலை ஹிட் செய்யுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் - பிரபலங்கள் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.