ETV Bharat / entertainment

' 'விக்ரம்' பட First half-ல் இதனால் தான் கமலுக்கு வசனமில்லை' - லோகேஷ் கனகராஜ்

author img

By

Published : Jun 9, 2022, 4:01 PM IST

’விக்ரம்’ பட First half-இல் இதுனால தான் கமலுக்கு வசனமில்லை’ - லோகேஷ் கனகராஜ்
’விக்ரம்’ பட First half-இல் இதுனால தான் கமலுக்கு வசனமில்லை’ - லோகேஷ் கனகராஜ்

சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றியடைந்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் ஏன் கமலுக்கு முதல் பாதியில் வசனமில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள 'விக்ரம்' திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்விலேயே ஒரு மிக்கியமான திரைப்படமாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன் 9) நடிகர் கமல்ஹாசன் மற்றும் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ஒரு செய்தியாளர் லோகேஷ் கனகராஜிடம், 'ஏன் First half-ல் கமல்ஹாசனுக்கு எந்த வசனமுமில்லை..? அவரைப் போன்ற முன்னணி நடிகரிடம் இதை சொல்லி எப்படி ஒப்புக்கொள்ள வைத்தீர்கள்..?' எனக்கேள்வி கேட்டார்.

அதற்கு லோகேஷ் கனகராஜ் பதிலளிக்கும் முன் கமல், 'அதற்கு முன்னே நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் படத்தில் First half-ல் மட்டும் தான் வசனமில்லை. ஆனால், நான் வசனமே இல்லாமல் ஒரு படம் நடித்தவன். ஆகையால், என்னை ஒப்புக்கொள்ள வைப்பது அவருக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்திருக்காது' எனப் பேசியதையடுத்து,

அதை வழிமொழிந்த இயக்குநர் லோகேஷ், 'அவர் சொன்னது போல், என்றுமே புதிய முயற்சிகளை செய்வதை அவர் நிறுத்தியதே இல்லை. நான் இதைக் கூறியபோதும் அதை ஊக்கப்படுத்தி அதற்கு முன் நின்று ஒத்துழைப்புத்தந்தார்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நயன், விக்கி திருமணத்தில் காதல் பிரியாணி - நட்சத்திரங்களுக்கு சைவ விருந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.