ETV Bharat / entertainment

திருச்சிற்றம்பலம் படத்தின் 'தேன்மொழி' பாடல் நாளை வெளியாகிறது!

author img

By

Published : Jul 29, 2022, 7:44 PM IST

திருச்சிற்றம்பலம் படத்தின் ’தேன்மொழி’ பாடல் நாளை வெளியாகிறது!
திருச்சிற்றம்பலம் படத்தின் ’தேன்மொழி’ பாடல் நாளை வெளியாகிறது!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் ‘தேன்மொழி’ எனும் பாடல் நாளை(ஜூலை 30) முதல் வெளியாகிறது.

நடிகர் தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர், மித்ரன் ஜவஹர். இவர் தற்போது நான்காவது முறையாக தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். அனிருத் இசையில் இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நாளை(ஜூலை 30) நான்காவது பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ’தேன்மொழி’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: சந்தானத்தின் ‘குலுகுலு’ திரைப்படம் வெளியானது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.