'தாய் கிழவி' பாடல் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்!

author img

By

Published : Jun 24, 2022, 8:50 PM IST

’தாய் கிழவி’ பாடல் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'தாய் கிழவி' எனும் பாடல் இணையத்தில் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் 'திருச்சிற்றம்பலம்'. இயக்குநர் மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் தனுஷுடன் சேர்ந்து இயக்குநர் பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான‌ 'தாய் கிழவி' என்ற பாடல் இன்று (ஜூன் 24) இணையத்தில் வெளியானது. இதனை சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்கள் ஆடி, பாடி கொண்டாடினர்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்று முதல் திரையரங்குகளில் அசோக் செல்வனின் 'வேழம்'..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.