ETV Bharat / entertainment

'விக்ரம் வேதா'விற்குப் பிறகு என்ன?... என்ற கேள்விக்கு இத்தொடர் சரியான பதிலாக இருக்கும் - இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி

author img

By

Published : Jun 8, 2022, 3:19 PM IST

30 மொழிகளில் தமிழ் வலைதளத் தொடர் ' சுழல் - தி வோர்டெக்ஸ்'! அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17ஆம் தேதி முதல் வெளியாகும். இத்தொடரின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட முறையில் வெளியீட்டு விழா நடைபெற்றது.

'சுழல் - தி வோர்டெக்ஸ்'! வலைதள தொடர் என்னை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் - நடிகர் கதிர் பேச்சு
'சுழல் - தி வோர்டெக்ஸ்'! வலைதள தொடர் என்னை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் - நடிகர் கதிர் பேச்சு

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டப் பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் தமிழ் வலைதளத்தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. வலைதளத்தொடரின் முன்னோட்டம் நேற்று வெளியானது.

'விக்ரம் வேதா' புகழ் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதளத்தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள்.

மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதளத் தொடருக்கு, சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17ஆம் தேதி முதல் வெளியாகும் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட முறையில் வெளியீட்டு விழா நடைபெற்றது.

'சுழல் - தி வோர்டெக்ஸ்'! வலைதள தொடர் என்னை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் - நடிகர் கதிர் பேச்சு
'சுழல் - தி வோர்டெக்ஸ்'! வலைதளத் தொடர் என்னை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் - நடிகர் கதிர் பேச்சு
இந்த விழாவில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித், அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம், புஷ்கர் - காயத்ரி, அனுசரண், பிரம்மா, ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் படக்குழுவினரும், படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
புஷ்கர் & காயத்ரி பேசுகையில், ''இந்த தொடரின் கருவை மட்டும் நாங்கள் முதலில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார்.
அந்த தருணத்தில் எங்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை, தற்போது வரை பொறுப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. ‘விக்ரம் வேதா’விற்குப் பிறகு என்ன? என்ற வினாவை எங்களிடம் கேட்பவர்களுக்கு இந்தத் தொடர் தான் சரியான பதிலாக இருக்கும்.
மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்தத் தொடர் முதலில் இந்திய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்” எனத்தெரிவித்தனர்.
நடிகர் கதிர் பேசுகையில், '’இந்தத் தொடரில் நடிக்கும்போது, இந்தத் தொடர் உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பணியாற்றவில்லை. நம்முடைய கதையை உலகத்தில் உள்ள பலரும், அவர்களுடைய இடத்தில் அவர்களுடைய மொழியில் பார்க்க முடியும் என்றால் அது பெருமகிழ்ச்சி.
இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் நம் மண் சார்ந்தவை. ஆனால், இவை சர்வதேச பார்வையாளர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தில் போலீஸ் அலுவலராக நடித்திருக்கிறேன்.‘பரியேறும் பெருமாள்’ என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அதனையடுத்து என் திரையுலகப் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சியை ஏற்படுத்திய தொடர் ‘சுழல்’. இதற்காக தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசானுக்கு என்றென்றும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

இதையும் படிங்க: சோழ தேசத்தில் ’பொன்னியின் செல்வன்’ டீசர்.. விழாக்கோலம் பூணும் தஞ்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.