ETV Bharat / entertainment

கங்குவா - மாஸ் ஆக பெயர் வைத்த சூர்யா 42 படக்குழுவினர்; மிரளவைக்கும் அர்த்தம்!

author img

By

Published : Apr 16, 2023, 11:21 AM IST

சூர்யா 42ஆவதாக நடிக்கும் படத்திற்கு, ''கங்குவா'' என படக்குழுவினர் பெயர் வைத்துள்ளனர்.

Surya 42 Movie name is revealed
Surya 42 Movie name is revealed

சென்னை: இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா 42’ திரைப்படம் உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர் வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை சூர்யா ரசிகர்களிடையே அதிகரித்தது. தற்போது, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பை ‘கங்குவா’ என அறிவித்துள்ளது. இதன்பொருள் நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது ஆகும். இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி- தொழில் நுட்பத்தில் உருவாவதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும், அனைத்து மாநில மக்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான தலைப்பாக, இது வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் கோவா, சென்னை மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமிருக்கும் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வலிமை மிக்க கதாநாயகனின் பல்வேறு அவதாரங்களை இந்த ஆக்‌ஷன் என்டர்டெயினர் திரைப்படம் 3டியில் காட்ட இருக்கிறது. இது அனைத்துவிதமான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையில் அமையும்.

படத்தில் பல ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளதால், விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜிஐ காட்சிகள் செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால், இப்படம் வரும் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் சிவா தெரிவிக்கையில், '' 'சூர்யா 42' படத்தின் தலைப்பை 'கங்குவா' என அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். திரையில் நெருப்பின் வீரமும் வலிமையும் கொண்ட ஒரு கதாநாயகனாக நடிகர் சூர்யா இருப்பார். கம்பீரமான, தனித்துவமான அதே சமயம் சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு கதையாக இது பார்வையாளர்களுக்கு அமையும். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் பட வெளியீட்டுத் தேதியையும் அறிவிப்போம்'' என்றார்.

இதையும் படிங்க: Uttar Pradesh: அடிக் அகமது சுட்டுக் கொலை - உ.பி.யில் 144 தடை உத்தரவு அமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.