ETV Bharat / entertainment

PS 2: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் 'அக நக' பாடல் வெளியீடு

author img

By

Published : Mar 20, 2023, 8:00 PM IST

Updated : Mar 20, 2023, 9:57 PM IST

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் 'அக நக' பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பாடல்கள் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் 'அக நக' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

வந்தியத்தேவன், குந்தவை இடையிலான காதலை வெளிப்படுத்தும் பாடலாக 'அக நக' பாடல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 29ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே மிகப்பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் படக்குழு விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படப்பிடிப்பில் களேபரம்.. திருவண்ணாமலையில் என்ன நடந்தது?

Last Updated : Mar 20, 2023, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.