பொன்னியின் செல்வன் அப்டேட்: குந்தவையாக த்ரிஷா!!

author img

By

Published : Jul 7, 2022, 12:47 PM IST

கண்களை கவரும் தோற்றத்தில் குந்தவையாக த்ரிஷா

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர தோற்றம் வெளியாகியுள்ளது

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார்,விக்ரம் பிரபு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றத்தை படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறார்கள். விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் இன்று (ஜூலை 7) குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர தோற்றம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் அப்டேட் - மிடுக்கான தோற்றத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.