ETV Bharat / entertainment

தொகுப்பாளினி ரம்யா எழுதிய புத்தகம் - பென்குயின் நிறுவனம் வெளியீடு!

author img

By

Published : Nov 27, 2022, 4:00 PM IST

Etv Bharatதொகுப்பாளினி ரம்யா எழுதிய புத்தகம் - பென்குயின் நிறுவனம் வெளியீடு
Etv Bharatதொகுப்பாளினி ரம்யா எழுதிய புத்தகம் - பென்குயின் நிறுவனம் வெளியீடு

தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா எடை குறைப்பு குறித்து எழுதியுள்ள புத்தகத்தை பென்குயின் நிறுவனம் வெளியிடுகிறது.

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த ரம்யா சுப்ரமணியம் தமிழ் சினிமாவில் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிடுகிறது. ரம்யா முன்பு உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், அனைவரையும் போலவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணி உடலை குறைப்பதற்கான முயற்சியில் இறங்கினார்.

பலவிதமான டயட், ஜிம்மில் தீவிரமான வொர்க்கவுட்ஸ் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை ரம்யாவை ஒரு தசாப்தமாக பாதித்து இருந்தது. இதற்கிடையில், ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்ததால் அவரை மீண்டும் இந்த கேலிக்குள் தள்ளியது. தற்போது ரம்யா முன்னெப்போதும் விடவும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதை எப்படி அவர் சாதித்தார் என்பதைதான் Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தன் சொந்த அனுபவம், செய்த தவறுகள், வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் ஃபிட்னெஸ் பயணத்தில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை கவனித்து ரம்யா பகிர்ந்திருக்கக்கூடிய இந்த விஷயங்கள் ஃபிட்னெசில் ஆர்வம் காட்டி துவங்க விரும்புபவர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

ரம்யா கூறும்போது, "இது என்னுடைய முதல் புத்தகம். இதில் என்னுடைய மொத்த ஆன்மாவையும் கொடுத்துள்ளேன். இது வெறும் ஃபிட்னெஸ் வழிகாட்டியோ என்னுடைய நினைவுக் குறிப்போ மட்டுமல்ல, இது இரண்டையும் விட இன்னும் பெரிதாக இருக்கும் என நம்புகிறேன்.ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட என் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் உண்மையாக தெரிவித்து இருக்கிறேன். என்னுடைய இந்த புதிய பயணத்தில் உங்கள் அனைவரது அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இளையராஜாவுக்கு தேசிய விருது கொடுத்தது ஏன் ? கங்கை அமரன் விளக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.