ETV Bharat / entertainment

வெளியானது தனுஷின் 'நானே வருவேன்' டீஸர்!

author img

By

Published : Sep 15, 2022, 7:06 PM IST

வெளியானது தனுஷின் ’நானே வருவேன்’ டீசர்!
வெளியானது தனுஷின் ’நானே வருவேன்’ டீசர்!

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தனுஷ் சைக்கோ போன்ற ஒரு கதாப்பாத்திரத்திலும், சற்று வயது முதிர்ந்த கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளது டீஸரைப் பார்க்கும்போது தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் படத்தின் இயக்குநரான செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இந்தப் படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையக்கும் நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கலைப்புலி எஸ். தாணு படத்தை தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் கெளதம்மேனன், ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.