Jawan box office collection Day 10: 400 கோடி வசூல் செய்த ஜவான்!

Jawan box office collection Day 10: 400 கோடி வசூல் செய்த ஜவான்!
ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஏற்கனவே 400 கோடி வசூல் செய்துள்ள நிலையில், படம் வெளியாகி 10வது நாள் வசூலில் 55% திடீர் ஏற்றம் கண்டுள்ளது.
சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான திரைப்படம், ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சஞ்சய் தத் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஜவான் படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 53.23 கோடியும், மூன்றாவது நாளில் 77.83 கோடியும் வசூல் செய்தது. நான்காவது நாளில் 80 கோடி வசூல் செய்து ஒரே நாளில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.
படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஜவான் திரைப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் அறிக்கையின்படி, ஜவான் படம் வெளியாகி 10வது நாளில் பெரும் ஏற்றத்துடன் 32 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது.
ஜவான் வெளியான 9வது நாளில் 20.61 கோடி மட்டுமே வசூலான நிலையில் பத்தாவது நாளில் வசூலில் அதிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. வசூலில் இந்த திடீர் ஏற்றத்தின் காரணத்தால் இதுவரை ஜவான் திரைப்படம் மொத்தமாக 442.49 கோடி வரை வசூல் செய்துள்ளது.
