ETV Bharat / entertainment

திரையுலகிற்கு முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் - விடுதலை இசை வெளியீட்டு விழாவில் இளைஞராஜா புகழாரம்!

author img

By

Published : Mar 9, 2023, 8:01 AM IST

விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா
விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

'விடுதலை பாகம் 1' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, தமிழ் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

சென்னை: ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில், ‘விடுதலை' (Viduthalai) திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் போன்ற திரை பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் சுவையூட்டும் வகையில் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதை அடிப்படையில், இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விடுதலை முதல் பாகத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 8) மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, பவானி, இயக்குநர் ராஜீவ் மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் படப்பிடிப்பின்போது உயிரிழந்த சண்டைக் கலைஞர் சுரேஷின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசுவதற்காக வெற்றிமாறனை அழைத்த போது, ரசிகர்கள் தலைவா என்று கத்தினர். அதற்கு வெற்றிமாறன், தான் ஒரு நிகழ்ச்சியில் நடிகர்களைத் தலைவர்கள் என்று அழைப்பது உகந்ததல்ல என்று கூறியதைச் சுட்டிக்காட்டி, அது இயக்குநர்களுக்கும் பொருந்தும் என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், படப்பிடிப்பு இடத்தில் சூரிக்குக் காயம் ஏற்பட்ட போது, அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் கஷ்டப்பட்டு சூரி நடித்தார் என்று பெருமையாகக் கூறினார்.

பின்னர், இளையராஜா குறித்துப் பேசிய வெற்றிமாறன், அவரது அர்ப்பணிப்பைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இளையராஜா தனக்குக் கிடைத்த கிஃப்ட் என்றும் கூறினார். அசுரன் படத்திற்குப் பிறகு ரிலாக்ஸாக படம் பண்ண வேண்டும் என்று நினைத்ததாகவும், அந்த வகையில் விடுதலை படத்தை இயக்கியதாகவும் பேசிய வெற்றிமாறன், விஜய் சேதுபதி பாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க இருந்ததாகவும், லொக்கேஷன் காரணமாக அவரை வேண்டாம் என்று நினைத்ததாகவும் கூறினார்.

விடுதலை பாகம் ஒன்றில் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இல்லை என்றும், இரண்டாம் பாகம் முழுவதும் அவர் தான் என்றும் வெற்றிமாறன் தெரிவித்தார். பின்னர், வடசென்னை 2 குறித்த ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன், விடுதலை பாகம் 1 மற்றும் 2 முடிந்த பிறகு, வாடிவாசல் படம் தொடங்கும் என்றும், இதையடுத்து வட சென்னை இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும் மணிரத்னம் படத்திலேயே நடிக்காத ராஜீவ் மேனன், தனது படத்தில் நடிப்பாரா என்று நினைத்தபோது, கேட்ட உடனே ஓக்கே சொன்னது தனக்கு அதீத மகிழ்ச்சி" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இசைஞானி இளையராஜா, "இதுவரை திரையுலகம் சந்திக்காத ஒரு படமாக விடுதலை இருக்கும் எனவும், 1500 படங்களில் பணியாற்றிய நான் கூறுகிறேன், தமிழ் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன் என்று புகழாரம் சூடினார். தொடர்ந்து பேசுகையில், கடல் அலைகளை ஒப்பிட்டு வெற்றிமாறனின் திரைக்கதையில் வித்தியாசத்தை எடுத்துரைத்தார். மேலும் இந்த படத்தில் இதுவரை கேட்காத இசையை இருக்கிறது என்று ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கூறினார்.

இதையும் படிங்க: ஆர்ஜே பாலாஜியின் “ரன் பேபி ரன்” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.