ETV Bharat / entertainment

காதல் படங்களில் அதிகம் நடித்ததில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!

author img

By

Published : May 24, 2023, 10:12 AM IST

தீராக்காதல் படத்துக்காக திருப்பதி மலைக்கு இயக்குநர் ரோஹினுடன் நடந்து சென்றதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

theera kadhal
தீராக்காதல்

சென்னை: அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் போன்ற திரைப் படங்களை இயக்கியவர் ரோஹின் வெங்கடேசன். இவரது இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா நடிப்பில் உருவாகியுள்ள 'தீரா காதல்' திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் படங்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, “எல்லா கதைகள் பின்னாடியும் ஒரு கதை இருக்கும்‌. அதே போலத் தான் ‘தீராக்காதல்’ கதைக்கு பின் இயக்குநர் ரோஹினுடன் கதை இருக்கிறது. சுமார் 4 முதல் 5 கதைகள் லைகா தமிழ் குமரனுக்கு அனுப்பினேன். அவருக்கு பிடித்தது ரோஹினின் தீராக்காதல் கதை மட்டுமே. ஆனால் அப்போது படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை என்றார்.

மேலும் தமிழ் குமரனுக்கு கதை பிடித்து, நான் ரோஹின் மூவரும் தொலைபேசியில் பேசும் போது ரோஹினை தமிழ் குமரன் புகழ்ந்து தள்ளிவிட்டார். இந்த படம் லைகா தயாரிப்பில் வேண்டும் என்பதால் நானும், ரோஹினும் திருப்பதி மலைக்கு நடந்து போனோம். இந்த படம் ஓகே ஆகிவிட வேண்டும் என்று சென்றோம். அப்போது தமிழ் குமரன் இந்த கதை பண்ணலாம் என்று அழைப்பு விடுத்தார். ரோஹின், படம் முடிந்து 2-வது முறையும் திருப்பதி நடந்தார்.

மேலும் காதல் படங்களில் நான் நிறைய நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்தது பெரிய விசயம். ஜெய் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ரோஹின் உறுதியாக இருந்தார். ஆனால் நடிகர் அம்ஜத் இந்த படத்தில் என்னுடைய கணவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.

நடிகர் ஜெய்‌ மேடையில் பேசுகையில், “லைகா தயாரிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசையாக இருந்தது. அது நடந்து விட்டது. அதற்கு ஐஸ்வர்யாவுக்கு நன்றி. 'அதே கண்கள்' திரைப்படம் 4 - 5 முறை பார்த்து விட்டேன். இந்த இயக்குநர் ரோஹினின் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இந்த படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது.

அதிவேகமாக நகரும் இந்த காலகட்டத்தில் இது மாதிரி படத்தில் நடித்ததற்கு சந்தோசம். படக்குழுவுக்கு நன்றி.
அடுத்து அஜித்தை வைத்து ரோஹின் படம் பண்ணப்போவதாக நியூஸ் பேப்பரில் படித்தேன். அந்த படத்தில் எனக்கு வில்லன் ரோலாவது கொடுங்கள் ரோஹின் என்றார். ஐஸ்வர்யாவுடன் படம் பண்ண வேண்டும் என்று நினைத்ததில் இந்த படம் அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் சரத்பாபு மரணம்: பிரதமர், ஆளுநர், ரஜினி, கமல் உள்ளிட்டப் பலர் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.