ETV Bharat / entertainment

ரூ.100 கோடி வசூல்.. அதிரடியில் தனுஷின் வாத்தி..

author img

By

Published : Mar 4, 2023, 5:56 PM IST

வாத்தி
வாத்தி

உலகலவில் வாத்தி திரைப்படம் ரூ.100 கோடி வசூல் ஈட்டியதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சென்னை: நடிகர் தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ தொடங்கி ‘வாத்தி’ வரை தனது நடிப்பு திறமையால் ஒரு முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அதோடு ஹாலிவுட் சினிமா வரை உயர்ந்து நிற்கிறார். தனது ஆரம்ப கால படங்களில் இருந்தே தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ என இரண்டு படங்கள் வெளியானது.

இந்த ஆண்டு முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் இப்படம் உருவானது. கடந்த மாதம் 17ஆம் தேதி இப்படம் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.

இப்படம் கல்வி தனியார்மயம் ஆகுவதை பற்றி பேசியது. ஒவ்வொரு மாணவர்களும் பார்க்க வேண்டிய படமாகவும் இப்படம் இருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்தும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது தனுஷ் திரை வாழ்வில் மற்றுமொரு மைல் கல்லாகும். இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்தது‌. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

அதனை தொடர்ந்து தற்போது ‘வாத்தி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. தனது திரை வாழ்வில் தனுஷ் குறுகிய காலத்தில் 2 ரூ. 100 கோடி வசூலித்த படத்தை கொடுத்துள்ளார். இதுவே மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படமும் இந்த 100 கோடி ரூபாய் பட்டியலில் இணைந்திருக்கும்.

ஆனால் கரோனா நோய்த்தொற்று காலத்தில் அப்படம் வெளியானது. படம் வெளியாகி சில தினங்களிலேயே தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ‘கர்ணன்’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இல்லை என்றால் அப்படமும் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருக்கும் என்பது சினிமா ஆர்வலர்களின் கணிப்பாக உள்ளது.

‘வாத்தி’ திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு திரையிடல் செய்வதற்கு படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர். சமூகத்தில் கூட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ‘வாத்தி’ படத்தை பார்த்து இயக்குநரை அழைத்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியானது "தி லெஜண்ட்" திரைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.