ETV Bharat / entertainment

"எது செய்தாலும் ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது" - நடிகர் தனுஷ் வேதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 10:57 AM IST

Captain Miller
எது செய்தாலும் ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது

Captain Miller: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

சென்னை: ராக்கி, சாணிக்காயிதம் படங்களை‌ இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை ஒட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அருண் மாதேஸ்வரன், சத்யஜோதி தியாகராஜன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், "சிறுதுளி பெரு வெள்ளம் என்று சொல்வார்கள். நான் 2002இல் சிறுக சிறுக சேர்த்த துளி என்னால் இன்று பெரு வெள்ளமாக இங்கு வந்துள்ளது. இது நான்‌ சேர்த்த சொத்து. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இப்படத்தை பற்றி யோசித்தால் என் மனதிற்கு முதலில் வருவது உழைப்பு. எல்லோரும் வேர்வை, ரத்தம் சிந்தி நிஜமாக உயிரைப் பணயம் வைத்து எடுத்த படம் இது.‌

அருண் மாதேஸ்வரன் உண்மையில் டெவில். மிகவும் மிருகத்தனமாக உழைப்புக்கு சொந்தக்காரர். அவரது மற்றும் இந்த குழுவிற்கு உழைப்பில் 50சதவீதம் கூட நான் பண்ணவில்லை. என்னை பூ போல பார்த்துக்கொண்டனர். நான் நிறைய புதுமுக இயக்குநர்களுடன் படம் பண்ணியுள்ளேன்.

அருண் மாதேஸ்வரனைப் பார்த்த போது எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் வந்தது. தன்னம்பிக்கை, திறமை, அரகன்ஸ் எல்லாம் இவரிடமும் உள்ளது. கரோனா நேரத்தில் எனக்கு கதை சொன்னார். 15 நிமிடங்கள் இப்படத்தின் லைன் சொன்னார். அப்போது எது கேட்டாலும் ம்ம் பண்ணிடலாம் என்பார். நான் படம் பார்த்தேன் அப்படி இருக்கு. அப்படி பண்ணிட்டீங்க.

நான் அவரைச் சந்திக்கும் போது ராக்கி வெளியாகவில்லை. என்னிடம் இந்த கதையும் சொல்லல. ஆனால் இது தெரிந்தது. இது சம்பவம் பண்ற கை அப்படினு. நல்லவேளையாக நான் முதலில் பண்ணிட்டேன். நேரம் நல்லா இருந்தா நீங்கள் மிகப்பெரிய இடத்துக்கு செல்வீர்கள்.

ஜி.வி எப்போ எது கேட்டாலும் உடனே ஓடிவருவார். சிவராஜ் குமார் நீங்கள் பல மேடைகளில் எனது ரசிகன் என்று சொல்லியுள்ளீர்கள். அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் சிரிக்கும் போது உங்கள் முகத்தில் உங்கள் அப்பா, தம்பி தெரிகிறார்கள் மூன்று பேரும் சிரிப்பது போலதான் உள்ளது.

அப்பா பெயரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். கலை இயக்குநர் ராமலிங்கம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் இருவருக்கும் நன்றி. நான் படம் பார்த்தேன். முழு படமும் பார்த்த பிறகு ஹப்பா என்றிருந்தது. முழு உழைப்பை கொடுத்துள்ளீர்கள்.

கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் மாதேஸ்வரன் வைத்துள்ள டேக் லைன் மரியாதை தான் சுதந்திரம். இப்போ எதுக்கு இங்க மரியாதை இருக்கு யாருக்கு சுதந்திரம் இருக்கு. எது செய்தாலும் அதில் குறை சொல்ல ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. சின்ன கூட்டம் தான் ஆனால் இருக்கிறது. அது உனக்கு இது எனக்கு என்பது எதற்கு. அவன் (இறைவன்)முடிவு செய்யட்டும் அப்போது பாத்துக்கலாம்.

எது, எதற்கோ ஓடுகிறோம், செய்கிறோம், ஆட்டம் எல்லாம் ஆடுகிறோம். நமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அந்த ஆட்டம் நின்றுவிடும். நமது முக்கியத்துவம் எது என்று தெரிந்து விடும். இந்த படம் ரொம்ப புதுசாக இருக்கும் என்று நம்புகிறேன். முழுக்க, முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வடசென்னை 2 வரும். கண்டிப்பா வரும்.

அதுக்கு என்று ஒரு நேரம் இருக்கு. இத்தனை உள்ளங்கள் வேண்டும் வேண்டும் என்று சொல்லும்போது வராமலா போய்டும். அது வரும் போது அது பத்தி பேசலாம். மாரி செல்வராஜ் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது. நம்ம படத்தை பத்தி நிறைய பேச வேண்டும். அதை பிறகு பேசலாம். எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை" என்று பேசினார்.

Rapid fire பெயரில் நடிகர் தனுஷிடம் எழுப்பப்பட்ட கேள்விகள்

தோல்வி: தோல்வி வந்தால் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டும்.

நண்பர்கள்: ஜி.வி பிரகாஷ் குமார் போல் இருக்க வேண்டும்.‌ நண்பர்கள் என்றால் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கூட இருக்க வேண்டும் தானே அப்போ ஜி.வி போல இருக்க வேண்டும்.

சமூக வலைத்தளம்: ஒரு மிகப் பெரிய காலத் திருடன். உங்களுக்கே தெரியாமல் உங்களின் நேரத்தை திருடிக்கொண்டு இருப்பது உங்களுக்கே தெரியாது.‌

மென்டல் ஹெல்த்: ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அன்பால் மட்டுமே அதை சரி செய்ய வேண்டும். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது.

வெற்றி: இங்குள்ள எல்லோருமே எனது வெற்றிதான். இதுபோல நாங்கள் சந்தித்து 333நாட்கள் ஆச்சு. (ரசிகர்கள் கரகோஷம் கேட்க வேண்டும் என்று தனுஷ் கேட்க ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.) பாட்டுப் பாட கேட்டதற்கு ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு என்ற விஜயகாந்த் படப் பாடலை பாடினார்.

இதையும் படிங்க: களத்தில் இறங்கிய 'டாப் ஸ்டார்'.. தூத்துக்குடியில் வெள்ள நிவாரணம் வழங்கிய பிரசாந்த்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.