ETV Bharat / entertainment

அயலான் டீசர் எப்போது? ஏலியனோடு புகைப்படம் வெளியிட்ட படக்குழு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 5:26 PM IST

அயலான் பட டீசர் வெளியீடு
அயலான் பட டீசர் வெளியீடு

Ayalaan Movie Update: சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள அயலான் படத்தின் டீஸர் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை: இயக்குநர் ரவிக்குமார் 'இன்று நேற்று நாளை' என்ற டைம் டிராவலை மையமாக கொண்ட படத்தை இயக்கியதன் மூலம், யார் இந்த இயக்குநர் என்று ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குநர் என்கிற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர், "இன்று நேற்று நாளை" படத்தின் வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தனக்கென தனி அடையாளைத்தை உருவாக்கி கொண்டார்.

அறிவியல் ஃபேண்டஸி படங்களை எடுப்பதில் ஆர்வம் மிகுந்த இயக்குநர் ரவிக்குமார், அடுத்து என்ன படம் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அப்படத்திற்கு "அயலான்" என பெயரிடப்பட்டது. மேலும், ஏலியனை மைய்யமாகக் கொண்டு உருவாகும் படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். "அயலான்" படத்தின் பணிகள் தொடங்கி பல வருடங்கள் கடந்தும், பல்வேறு தடைகள் ஏற்பட்டதை அடுத்து, படத்தின் வெளியீடு தாமதமானது.

இந்நிலையில் "அயலான்" படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் கவனத்துடன் படக்குழுவினர் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் அயலான் படத்தின் பாடல் வெளியானதை அடுத்து, படைத்தை குறித்த எந்த வித அதிகாரப்புர அறிவிப்பு இல்லாமல் இருந்தது. தொடர்ந்து சில மாதங்களுக்கு பின்னர் க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டப்பட்டது. முன்னதாக இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று தகவல் வெளிகி இருந்தது.

ஆனால் திடீரென படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு "அயலான்" படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "மாவீரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் "அயலான்" படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க: 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அமிதாப் ரஜினி கூட்டணி.. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் தலைவர் 170!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.