ETV Bharat / elections

திருப்பத்தூரில் ரூ.5 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்!

author img

By

Published : Apr 5, 2021, 7:42 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.5 கோடி ரூபாய், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆம்பூரில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவனருள் பேட்டி
ஆம்பூரில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவனருள் பேட்டி

திருப்பத்தூர் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 333 வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இதனை, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சிவனருள், தேர்தல் பார்வையாளர் மனோஜ் காத்ரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஜயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்க்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் கூறுகையில் ’’திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், உள்ள வாக்குசாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள், மண்டல அலுவலர்கள், கண்காணிப்பில் பாதுகாப்புடன், அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும், 13,000 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதில், 6,508 தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ளனர். மேலும், 2,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் 702 தேர்தல் பறக்கும் படை குழுவினரால் ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதற்காக வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 154 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16 சிறப்பு வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: சசிகலா பெயரை சேர்க்காவிடில் தேர்தலை ஒத்திவையுங்கள்- அமமுக ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.