தேர்தல் 2024

970 மில்லியனுக்கு அதிகமான மக்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் நாடாளுமன்ற கீழவைக்கான 543 பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய உள்ளனர். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், இந்த பகுதியளவு நீதி அதிகாரம்பெற்ற அமைப்பின் தலைமையேற்றுள்ளார். இவருக்கு உதவியாக இரண்டு தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோர் தேர்தலை நடத்துகின்றனர்.

நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைத்து 7 கட்டங்களாக தேர்தலை நடத்தி வருகின்றனர். கூடுதலாக ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் மேற்பார்வையிடுகிறது.

தேர்தல் ஆணையமானது, இந்தியாவின் கவுரவத்தை உலக அரங்கில் உயர்த்தும் அளவுக்கு தேர்தலை நடத்த உறுதிபூண்டுள்ளது. சுதந்திரமான, சார்பற்ற, நினைவில் கொள்ளத்தக்க தேர்தலை நடத்த முடியும் என அனைத்து மாநில நிலைமைகளை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 970 மில்லியன் மக்கள், 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்காக, 1.5 கோடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது வரையிலும் தேர்தல் ஆணையம் 17 மக்களவைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 16 குடியரசுத்தலைவர் தேர்தல்களையும், 400 சட்டப்பேரவைத் தேர்தல்களையும் கூட ஆணையம் நடத்தியுள்ளது. 97.8 தகுதியான வாக்காளர்களில் 49.72 கோடி பேர் ஆண்கள். 47.1 கோடி பேர் பெண் வாக்காளர்கள். இவர்களில் 1.82 கோடி முதன்முறை வாக்காளர்களும் அடக்கம்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்றே 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத் தக்கது. 2019ம் ஆண்டில் 91.2 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 43.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 47.3 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். அப்போது நடைபெற்ற தேர்தலின் போது, 61.5 கோடி பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இது 67.4 சதவீத வாக்குப்பதிவாகும். இத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை வென்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 52 இடங்களை வென்றது. திராவிட முன்னேற்ற கழகம் 24 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. இது தவிர தேசியவாத காங்கிரஸ் 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கட்சி 3 தொகுதிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

PHASES - 7
STATES : 28
UT'S : 8
SEATS : 543
Phase 1
April 19
States - 21
Seats - 102
Phase 2
April 26
States - 13
Seats - 88
Phase 3
May 7
States - 11
Seats - 94
Phase 4
May 13
States - 10
Seats - 96
Phase 5
May 20
States - 8
Seats - 49
Phase 6
May 25
States - 8
Seats - 58
Phase 7
June 1
States - 8
Seats - 57
Note: Conduct of Poll in 29-Betul (ST) Parliamentary Constituency of Madhya Pradesh adjourned due to death of contesting candidate of Bahujan Samaj Party, a recognised National Party. The poll will be held on May 07 (3rd Phase)
PHASE
, 2024 | seats
S.noStateConstituencyDate
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.