ETV Bharat / crime

நீட் மோசடி - மாணவி தீக்‌ஷா கைது!

author img

By

Published : Jan 18, 2021, 5:50 PM IST

Updated : Jan 18, 2021, 8:36 PM IST

மாணவி தீக்‌ஷா கைது, நீட் மோசடி, Student Dheeksha arrested for fake neet mark certificate, neet scam, நீட் போலி மதிப்பெண் சான்றிதழ், neet marksheet scam, student dheeksha fake, neet fake, நீட் ஆள்மாறாட்டம், neet Impersonation
மாணவி தீக்‌ஷா கைது

17:42 January 18

சென்னை: நீட் மதிப்பெண் சான்றிதழில் மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்‌ஷாவை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வில் நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் ஏற்கனவே தீக்‌ஷாவின் தந்தை பாலசந்திரன் கைது செய்யப்பட்டார். இச்சூழலில் தலைமறைவாக இருந்த தீக்‌ஷாவை பெங்களூரில் வைத்து பெரியமேடு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

மாணவி தீக்‌ஷா கைது

நீட் கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரத்தில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மாணவியை சென்னை பெரியமேடு காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து கைதுசெய்தனர்.

பின்னர் அவரை சென்னை கொண்டு வந்து பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பிறகு எழும்பூர் பெருநகர குற்றவியல் 2ஆவது நீதிமன்றத்தில் மாணவியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 2020 நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் நீட் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 2020 டிசம்பர் மாதம் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தனது தந்தை பாலச்சந்திரனுடன் அந்த கலந்தாய்வில் கலந்துகொண்டார். நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற மாணவி, 610 மதிப்பெண் பெற்ற ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டார்.

அவர் சமர்ப்பித்த சான்றிதழ் போலி என்று தெரியவந்ததும், அது தொடர்பாக மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் மாணவி, பல் மருத்துவரான அவரது தந்தை பாலச்சந்தர் ஆகியோர் மீது 419- ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 420- மோசடி, 464- தவறான ஆவணத்தை உருவாக்குதல், 465- பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல், 468- ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல், 471- பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என கூறி பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

நீட் தேர்வு மோசடி விவகாரம் - இடைத்தரகரை தேடும் போலீஸ்!

தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் இவர்கள் ஆஜராகாததால், தந்தையும், மகளையும் தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தனர். இச்சூழலில், தீக்சாவின் தந்தை ஜனவரி 1ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். ரூ. 20 ஆயிரம் கொடுத்து போலி சான்றிதழை அவருக்கு சிலர் தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது.  

மேலும், பாலச்சந்திரனை 4 நாட்கள் காவலில் எடுத்து பெரியமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். போலிச் சான்றிதழ் தயாரிக்க உதவிய இடைத்தரகர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து மாணவி காவல் துறையின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்தார். இந்த சமயத்தில் அவர் பெங்களூருவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, அங்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.

Last Updated :Jan 18, 2021, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.