ETV Bharat / crime

கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு சரியான தகவலை வழங்காதது ஏன் - நீதிபதி கேள்வி

author img

By

Published : Oct 27, 2021, 8:57 PM IST

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு சரியான தகவலை வழங்காதது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் நாளை (அக்டோபர் 28) பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தபசுமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கல்லுகுண்டகரை கிராமத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 28-ஆம் தேதி செல்வகணபதி என்பவர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியின் நண்பன் என்ற காரணத்திற்காக என்னை 2ஆவது குற்றவாளியாக தவறுதலாக சேர்த்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் எனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் நீதிமன்ற விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன்" என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் தபசுமுருகனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். என்ன காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்துள்ளீர்கள் என நீதிபதியின் கேள்விக்கு, கொலைக் குற்றம் குறித்து முழுமையான தகவலை இன்னும் காவல் துறையினர் வழங்கவில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த நீதிபதி, கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, நீதிமன்றத்திற்கு சரியான தகவலை வழங்காதது ஏன்? எனக் கேள்வியெழுப்பி நீதிமன்றத்திற்கு சரியான தகவலை வழங்காதது ஏன் என்பது குறித்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு (அக்., 28) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: குண்டர் சட்டம் காரணமாக கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.