ETV Bharat / city

ஆம்பூர் பெண் கொலை வழக்கில் இளைஞர் கைது!

author img

By

Published : Sep 19, 2019, 10:33 PM IST

Updated : Sep 19, 2019, 10:40 PM IST

இளம் பெண் கொலை

வேலூர்: ஆம்பூர் அருகே இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கொல்லப்பட்ட பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 20ஆம் தேதியன்று உடல் முழுவதும் காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் அவர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது ஏழுமலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ambur-woman-murder-case-police-arrested-a-guy-in-a-adultery-issue
ஏழுமலை

இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இறந்த பெண் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவரத்தினம். அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு எட்டு வயதில் அரவிந்த் என்ற மகன் உள்ளான். அவர்கள் குடும்பத்தோடு புதுக்கோட்டையில் வசித்துவந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்தாண்டுகளாக இருவரும் பிரிந்து, சிவரத்தினம் தன் மகனோடு தஞ்சையில் உள்ள அவர் தாயார் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சிவரத்தினம் குடும்பச் சூழ்நிலை காரணமாக, திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பின் ஏழுமலைக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோன் வாங்கிக்கொடுத்து ரொக்கமாக பணத்தையும் சிவரத்தினம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அதைத் திருப்பி கேட்ட சிவரத்தினத்தை, ஏழுமலை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே காவல்துறையினர் மீட்ட சிவரத்தினம் சடலம்
Intro:ஆம்பூர் அருகே இரு போலீசார் அலட்சியத்தால் 10 மணி நேரத்திற்கும் மேலாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் எடுக்கப்படாமல் அலைக்கழிப்பு  ஒருமாத காலம் கழித்து தான் மனைவியை தேடி வந்த கணவர் சடலத்தை கூட பார்க்க முடியாத நிலை உருவானதால் பெரும் பரபரப்பு
Body:


              வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ரயில்வே தண்டவாளம் அருகே உடல் சிதைந்து உயிரிழந்ததாக முதலில் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதை தொடர்ந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதால் கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில் கொலை செய்யப்பட்டு தண்டவாளம் அருகே வீசி சென்றுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர் அதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் இரு காவல்துறை நிறமே சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் செய்து அப்பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் அப்போது அப்பெண் அணிந்திருந்த புடவையால் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது போலீசார் உறுதி செய்தனர் அதன் பின்பு வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சன்னி மோப்பநாய் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடிக்க பிரேதம் கைப்பற்ற இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் பின்னர் உடலை கைப்பற்றிய ஆம்பூர் கிராமிய போலீஸார் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் உடல் முழுவதும் மற்றும் ஆடைகள் கலைந்த நிலையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதால் உடலை கைப்பற்றி வேலூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்


தஞ்சாவூர் மாவட்டம் 

ஒரத்த நாடு  மேல்மோட்டூபட்டி பகுதியை சேர்ந்தவர் சிவரத்தினம் இவருடைய கணவர் புதுக்கோட்டை மாவட்டம் கருககுறிஞ்சி சேர்ந்தவர் ராமசாமி இவர்களுக்கு இருவருக்குமிடையே திருமணம் நடைபெற்று புதுக்கோட்டைப் பகுதியில் வசித்து வந்தனர் இந்நிலையில் இவர்களுக்கு 8 வயது அரவிந்த் என்ற சிறுவன் உள்ளான் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தன் குடும்ப சூழ்நிலையை அறிந்த சீவரத்தினம் தஞ்சாவூர் பகுதியில் தனது தாய் வீட்டிலிருந்து வேலை தேடி திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைக்கு பணிக்கு வந்துள்ளார் அப்போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது இருவருக்கிடையே கள்ளத்தொடர்பால் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது அப்போது சீவரத்தினம் கள்ளக்காதல் ஏழுமலைக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார் அந்த செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பல நாட்களாக ஏழுமலையும் சிவ ரத்தினமும் பேசி வந்துள்ளனர் இந்நிலையில் திடீரென சில நாட்களாக காணாமல் போன சீவரத்தினம் தேடி அவரது மகன் அரவிந்த் மற்றும் சீவரத்தினம் தாயார் பல இடங்களிலும் தேடி கிடைக்காததால் அவருடைய கணவர் ராமசாமியை தொடர்புகொண்டு பேசினர் அப்போது இங்கேயும் வரவில்லை தனது மனைவியை தேட ஆரம்பித்தார் ராமசாமி அப்போது அவர் தனது 10 ஆண்டுகளாக பிரிந்து இருந்த மனைவியை தேட தொடங்கியதும் திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார் ராமசாமி அப்போது தொடர்பு எண்ணை கண்டுபிடிக்கும் வகையில் தொடர்பு கொண்டபோது போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது அப்போது திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து தான் அவர் சென்று உள்ளார் என்பது உறுதி செய்து கொண்ட ராமசாமி திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவி காணவில்லை என்று புகார் செய்தார் பின்னர்தான் மனைவியை  தேடி தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்த ராமசாமி கடைசியாக தன் மனைவி உடைய தொடர்பு எண்ணை  திருச்சி சமயபுரம் காவல்துறையினர் கொடுத்தார் ராமசாமி  பின்னர் அவருடைய தொடர்பு எண்ணை தீவிர விசாரணையில் இறங்கிய திருச்சி சமயபுரம் போலீசார்  சிவராத்தி நம் தொடர்பு எண்ணில் அதிகமாக பேசியது ஏழுமலை உடைய என்பது திருச்சி போலீசார் உறுதி செய்தனர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது பின்னர் இருவரும் திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாக கண்டுபிடித்த திருச்சி சமயபுரம் போலீசார் மற்றும் கணவர் ராமசாமி பின்னர் அவர் வீட்டிற்கு சென்று தனது மனைவி எங்கே என்று கேள்வி எழுப்பினார் அப்போது அவருக்கும் ராமசாமி மற்றும் திருச்சி சமயபுரம் போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது அதற்கு பின்பு ஏழுமலையை தீவிர விசாரணை மேற்கொண்ட திருச்சி சமயபுரம் போலீசார் ராமசாமி மற்றும் சீவரத்தினம் குடும்பத்தினர் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார் ஏழுமலை உங்கள் மனைவிக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது அவர் எனக்கு 12,000 ரூபாய் செல்போனை வாங்கிக் கொடுத்ததாகவும் பின்னர் எங்கள் இருவருக்கும் பணபரிமாற்றம் நடைபெற்றதாகவும் சில நாட்களாக அவரை நான் தொடர்பு கொள்ளாமல் எனது சொந்த ஊர் திருவண்ணாமலைக்கு மாவட்டம் தண்டராம்பட்டு வந்துவிட்டேன் இதனால் எண்ணை தொடர்பு கொண்ட சீவரத்தினம் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்தார் இதனால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு திருவண்ணாமலைக்கு வந்தால் உங்கள் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி அவரை வரவழைத்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் அருகே கொண்டுவந்து  பச்சகுப்பம் என்ற பகுதியில் தான் அணிந்திருந்த ஆடையை களைந்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அருகிலுள்ள தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டு சென்று விட்டேன் என்று திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் தெரிவித்தார் பதறிப்போன குடும்பத்தினர் தற்போது ராமசாமி மற்றும் சீவரத்தினம் குடும்பத்தினர் திருச்சி போலீசாருடன் அழைத்துவந்து ஏழுமலை ஆம்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்

20.8.2019 அன்று நடந்த சம்பவத்தை ஒரு மாதம் காலம் சீவரத்தினம் என்ற பெண் உடல் வேலூர் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடலை யாரும் உரிமை கோராத தான் காவல்துறையை முன்வந்து உடலை அடக்கம் செய்தனர் ஒரு மாதம் காலம் கழித்து தனது மனைவி உடலை பார்க்க வந்த கணவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர் அவசர அவசரமாக கொலை வழக்கை தற்கொலை வழக்கு என்று முடிவு செய்து யாரும் முன்வராததால் ஆதரவற்றோர் உடல் என்று முடித்து வைத்தது தற்போது சமூக ஆர்வலர்கள் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
Last Updated :Sep 19, 2019, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.