மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு நடைபெறுவதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜு தலைமையிலான காவல்துறையினர், நேற்று மாலை 4 மணியளவில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்தினர்.
கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் நிறைவில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 23,500 ரூபாய் ரொக்கப்பணம், சார் பதிவாளர் புலிபாண்டியன் தங்கியிருந்த தனியார் உணவகத்தின் அறையில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் பணம் என மொத்தம், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: காவல் நாயை கடித்து கொன்ற சிறுத்தை; அச்சத்தில் கிராமத்தினர்!