ETV Bharat / city

போதை மீட்பு மையத்தில் காவலர் மர்ம மரணம்

author img

By

Published : Jun 5, 2019, 8:25 AM IST

திருச்சி: சிகிச்சைக்கு வந்தவர் உயிரிழந்ததால், சர்ச்சையில் சிக்கிய போதை மீட்பு மையம் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்ததாக சோதனை மூலம் தெரியவந்துள்ளது.

போதை மீட்பு மையத்தில் காவலர் மறுமமாக உயிரிழந்துள்ளார்

திருச்சி கே.கே. நகர் அன்பழகன் தெருவில் லைஃப் கேர் சென்டர் டிரஸ்ட் என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மையத்தை, மணிவண்ணன், திவான் ஆகிய இருவரும் நடத்திவந்துள்ளனர்.

இந்த மையத்தில் தங்கி சிகிச்சைபெற்று வந்த தமிழ்ச்செல்வன் என்ற காவலர், இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இறந்த அவர் உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்த பெயரில்,

காவலர்கள் வழக்குப்பதிந்து அந்த சிகிச்சை மையத்தில் நடத்திய விசாரணையில், சிகிச்சைக்கு வரும் நபர்களை, சங்கிலியால் கட்டிப்போட்டு, அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மையத்தில் தங்கியிருந்தவர்களை மீட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் திருச்சி அரசு மருத்துவனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் நிரஞ்சனா தேவி என்பவர் காவலர்களின் அறிவுரையின்படி, இன்று அந்த மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போதை மீட்பு மையத்தில் காவலர் மறுமமாக உயிரிழந்துள்ளார்
Intro:சர்ச்சையில் சிக்கிய போதை மீட்பு மையம் சட்டவிரோதமாக செயல்பட்டது சோதனை மூலம் தெரியவந்துள்ளது.


Body:குறிப்பு: இதற்கான வீடியோ மெயில் மற்றும் ftp மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி:
திருச்சியில் சர்ச்சையில் சிக்கிய போதை மீட்பு மையம் அரசு விதிகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது சோதனை மூலம் தெரியவந்துள்ளது.
திருச்சி கே கே நகர் அன்பழகன் தெருவில் லைப் கேர் சென்டர் டிரஸ்ட் என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மையம் செயல்பட்டு வந்தது. இதை மணிவண்ணன், திவான் ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தமிழ்ச்செல்வன் என்ற போலீஸ்காரர் இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். மேலும் போதை மீட்பு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்களை சங்கிலியால் கட்டிப் போட்டு, அடித்து துன்புறுத்திய விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் போலீசார் தலையிட்டு மையத்தில் தங்கியிருந்த அவர்களை மீட்டு அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த மையத்தை ஆய்வு செய்ய சென்னையில் உள்ள மனநல காப்பக இயக்குனர் உத்தரவிட்டார். இதன்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அறிவுரையின்படி மனநல மருத்துவர் நிரஞ்சனா தேவி இன்று இந்த மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த மையத்தில் 26 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவர்களுக்கு போதுமான கழிவறை, குடிநீர், படுக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. போதைக்கு அடிமையானவர்களை சமூக நலத்துறை படிப்பு படித்தவர்கள் தான் கையாள வேண்டும். ஆனால் 10ம் வகுப்பு படித்த ஒருவர் இவர்களை கையாண்டுள்ளார். மேலும் இவர்களுக்கு வாரம்தோறும் மனநல மருத்துவர் நேரில் வந்து ஆய்வு செய்து மருந்து அளிக்க வேண்டும். ஆனால் அது போன்று மருத்துவர் யாரும் இங்கு வந்ததாக தெரியவில்லை. இந்த மையத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கியதற்கான ஆதாரம் எதையும் நிர்வாகிகள் காட்டவில்லை. இதுகுறித்து முழு விரிவான அறிக்கை சென்னை மனநல காப்பக இயக்குனர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதுபோன்ற தனியார் மையங்களை நாட வேண்டிய அவசியம் பொதுமக்களுக்கு இல்லை. திருச்சி அரசு மருத்துவமனை உட்பட தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடி போதை மீட்பு சிகிச்சை மையங்கள் தனியாக செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அங்கு என்று இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.


Conclusion:அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இலவச போதை மீட்பு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.