ETV Bharat / city

‘திமுக ஆட்சி ஒரு இனத்தின் ஆட்சியாக இருக்கும்’ - மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Nov 22, 2021, 10:47 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திருப்பூரில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது இனத்தின் ஆட்சியாக இருக்கும்” என்றார்.

திருப்பூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 28.17 கோடி ரூபாய் மதிப்பிலான 20 திட்டப்பணிகள், புதிதாக 41.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 4ஆயிரத்து 335 பயனாளிகளுக்கு 55.65 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் 84.24 கோடி ரூபாய் அளவிற்கான திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார்.

அப்போது சிறப்புரையாற்றிய முதலமைச்சர், “திருப்பூருக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. அண்ணா, பெரியார் இருபெரும் தலைவர்கள் முதன் முறையாக சந்தித்துகொண்ட திருப்பூரில் அரசு விழாவில் கலந்துகொண்டதில் பெருமையடைகிறேன். திமுக ஆட்சி, ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது இனத்தின் ஆட்சியாக இருக்கும்.

தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற பெயர் எடுத்தோம், ஆனால் கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என பேச விரும்பவில்லை , இதில் அரசியல் பேச விரும்பவில்லை , அதற்கென வேறு மேடை இருக்கிறது.

நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை

கடந்த 10 ஆண்டுகாலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது அதற்குள் இவ்வளவு செய்திருக்கிறோம் என்றால் இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்ய விருக்கிறோம் என எண்ணி பாருங்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

நம் பணிகளின் சாதனைகளை அண்டை மாநிலம் மட்டுமல்ல அண்டை நாடுகள் எல்லாம் பாராட்டுகின்றன. அவை எனக்கான பாராட்டுக்கள் அல்ல. நம்பர் 1 முதலமைச்சர் அல்ல நம்பர் 1 தமிழ்நாடு என்பதே எனக்கு பெருமை. 5 மாதம் அல்ல 5 ஆண்டுகாலமும் இதுபோலத்தான் பணி செய்வோம். உத்தரவிடுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன் . எங்களை உற்சாகப்படுத்துங்கள்” என்றார்.

இதையும் படிங்க: 'அந்த எண்ணத்தில்தான் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.