ETV Bharat / city

கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை!

author img

By

Published : Nov 21, 2019, 2:36 AM IST

Attempted murder 7 years judgement

திருப்பூர்: காங்கேயத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் 4 பேருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காடையூரைச் சேர்ந்தவர் சேனாபதி (56). இவருக்கும் காங்கேயம் பசுவமூப்பன்பாளையத்தைச் சேர்ந்த கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகியோருக்கு இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இந்த நேரத்தில் 2007ஆம் ஆண்டு, நான்கு பேரும் சேர்ந்து சேனாபதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துதாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரிக்கக் காவல் துறையினர் தாமதப்படுத்தியதால் சேனாபதி திருப்பூர் நீதிமன்றத்தில் தனிமனு தாக்கல் செய்திருந்தார்.

முடியாத வேலைக்கு 10 கோடி ரூபாய் கட்டணமாம் - விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

அத்தனி மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், காங்கேயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் காங்கேயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தர் ராஜ் குற்றவாளிகளான கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகிய நான்கு பேருக்கும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்ய முயன்ற விவகாரம்! 4 பேருக்கு ஏழாண்டுகள் சிறை!

மேலும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் இவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Intro:அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்ய முயன்ற விவகாரம் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை.Body:
திருப்பூர் காங்கயத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து கொலை முயற்சி செய்த விவகாரத்தில் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர், காங்கயம், காடையூர் பகுதியை சேர்ந்தவர் சேனாபதி (56). இவருக்கும் காங்கயம் பசுவமூப்பன்பாளையத்தை சேர்ந்த கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகியோருக்கு இடையே பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29.03.2007 ஆம் ஆண்டு 4 பேரும் சேர்ந்து சேனாபதி வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரிக்க போலீசார் தாமதப்படுத்தியதால் சேனாபதி திருப்பூர் நீதிமன்றத்தில் தனிமனு தாக்கல் செய்துள்ளார். அந்த தனிமனுவை விசாரணை செய்த நீதிமன்றம் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கான திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தர்ராஜ் குற்றவாளிகளான கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகிய 4 பேருக்கும் அத்துமீறி விட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் இவை அனைத்தும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் இவர்கள் 4 பேரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.