ETV Bharat / city

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: ஒரு நபர் கமிஷன் முன்பு வழக்கறிஞர்கள் ஆஜர்!

author img

By

Published : Nov 15, 2019, 7:26 PM IST

sterlite firing

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஒருநபர் கமிஷனில் நேரில் ஆஜராகி இன்று விளக்கமளித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை முகாம் அலுவலகத்தில் தனது விசாரணையை நடத்தி வருகிறார். ஒரு நபர் ஆணையத்தின் 16ஆவது கட்ட விசாரணை 12ஆம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவு பெறவுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை - நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

இதில் 4ஆம் நாள் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று ஒரு நபர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக வழக்கறிஞர்கள் பார்வேந்தன், ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி, ஹரிராகவன் ஆகியோர் வந்திருந்தனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: ஒரு நபர் கமிஷன் முன்பு வழக்கறிஞர்கள் ஆஜர்

இதில் வழக்கறிஞர் பார்வேந்தன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற அரச பயங்கரவாதத்தில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். போராட்டத்தில் பலியான நபர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்து இறந்தவர்களின் உடலை உடற்கூறாய்வு செய்யக்கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியிருந்தோம்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலையென்ன? - அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்

வழக்கின் பேரில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியச் சட்ட உதவி வழங்கலாம் என்ற ஆணையை நீதிபதிகள் பிறப்பித்தனர். அந்த ஆணையையொட்டி அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தில் நீதிபதி விசாரணைக்கு ஆஜராக இன்று எங்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அழைப்பாணை பேரில் நாங்கள் வந்திருக்கிறோம்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக 450 பக்க ஆவணங்களைத் தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிற மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், ஸ்டெர்லைட் சட்ட ஆலோசகராக இருந்த சத்திய பிரியா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். ஆகவே இந்த துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அத்தனை அரசு அலுவலர்களும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

‘2013 முதல் ஸ்டெர்லைட் சட்டவிரோதமாக இயங்கியது’ - உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Intro:ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஒருநபர் கமிஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் - துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வலியுறுத்தல்
Body:தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ம் தேதி அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷனை அமைத்து உத்தரவிட்டது. நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை முகாம் அலுவலகத்தில் தனது விசாரணையை நடத்தி வருகிறார். ஒரு நபர் கமிஷனின் 16-வது கட்ட விசாரணை கடந்த 12ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில் 4-ம் நாள் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று ஒரு நபர் கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக வக்கீல்கள் பார்வேந்தன், ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி மற்றும் ஹரிராகவன் ஆகியோர் வந்திருந்தனர்.

இதில் வழக்கறிஞர் பார்வேந்தன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற அரச பயங்கரவாதத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் பலியான நபர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்னிறுத்தி அடுத்த நாளே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்து இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தோம். வழக்கின் பேரில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சட்ட உதவி வழங்கலாம் என்ற ஆணையைப் நீதிபதிகள் பிறப்பித்தனர். அந்த ஆணையையொட்டி அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷனில் நீதிபதி விசாரணைக்கு ஆஜராக இன்று எங்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அழைப்பானை பேரில் நாங்கள் வந்திருக்கிறோம். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக 450 பக்க ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித்தலைவர், ஸ்டெர்லைட் சட்ட ஆலோசகராக இருந்த சத்தியபிரியா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இங்கே பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் அவர்கள் அனைவரும் உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். மே 20-ம் தேதி அன்றே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற உத்தரவு கொடுக்கப்பட்டிருந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் 22-ந்தேதி வரை அந்த தகவலை போராடிக் கொண்டிருந்த பொதுமக்களு யாரும் தெரிவிக்கவில்லை. ஆகவே இந்தத் துப்பாக்கிச் சூடு என்பது எதிர்காலத்தில் ஒருவரும் மக்கள் நலனுக்காக, மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு செயலுக்கும் எதிராக போராட கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடாக நாங்கள் பார்க்கிறோம். ஆகவே இந்த துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அத்தனை அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

ரஜினிகாந்த், முதல்வர் உட்பட அனைவருமே அரசுக்கு ஆதரவாக கருத்துச் சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என கருதுகிறோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.