ETV Bharat / city

சேலத்தில் டீக்கடையில் மாமுல் கேட்டு தகராறு செய்த 4 பேர் கைது

author img

By

Published : Aug 11, 2022, 1:08 PM IST

சேலத்தில் டீக்கடையில் மாமுல் கேட்டு தகராறில் ஈடுபட்டு டீ மாஸ்டரை தாக்கிய 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

சேலம் : அம்மாபேட்டையைச் சேர்ந்த அப்துல் சுப்பு என்பவர் டீ மாஸ்டராக உள்ள நிலையில், நேற்று முன்தினம் (ஆக.9) இரவு டீக்கடைக்கு 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் கேட்டதற்கு அவர், இல்லை எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அக்கும்பல் கடையிலிருந்த 4 சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு சிகரெட் புகையை அப்துல் சுப்புவின் மீது ஊதி அடாவடி செய்தனர்.

மேலும், மாமூல் தருமாறு கேட்டு அப்துல் சுப்புவையும் தாக்கி தகராறில் ஈடுபட்டனர். அவரை கன்னத்தில் அறைந்தது மட்டுமில்லாமல், கண்ணாடி குடுவையை எடுத்து தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதனால், டீ மாஸ்டர் அப்துல் சுப்பு பலத்த காயமடைந்தார்.

மாமூல் கேட்டு டீ மாஸ்டரை தாக்கிய சிசிடிவி காட்சி

இது குறித்து அன்னதானம்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், கார்த்திகேயன், சதீஷ்குமார், ஹரிஹரன், மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் இன்று (ஆக.) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவான பிரபல கொலை வழக்கில் தொடர்புள்ள ரவுடி ரஞ்சித்தை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டீக்கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே பழமையான தேவாலயம் இடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.