ETV Bharat / city

ஃபெட்னா நிகழ்வு... அமர்நாத்துக்கு அழைப்பு! மத்திய அரசு அனுமதிக்குமா..?

author img

By

Published : Jun 8, 2019, 8:08 PM IST

அமர்நாத் ராமகிருஷ்ணா

மதுரை: கீழடி அகழாய்வு மூலமாக தமிழர்களின் தொன்மை நாகரீகத்தை வெளிக்கொணர்ந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, அமெரிக்காவில் நடைபெற உள்ள ஃபெட்னா தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க இந்த ஆண்டாவது மத்திய அரசு அனுமதிக்குமா? என்ற கேள்வி தொல்லியல் ஆர்வலர்கள் இடையே எழுந்துள்ளது.

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தொல்லியல் கண்காணிப்பாளராக இருந்து வழி நடத்தியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த, குறிப்பாக மதுரை மண்ணின் மைந்தரான அமர்நாத் ராமகிருஷ்ணா.

அகழாய்வுப் பணிகள்:

அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களும், சின்னங்களும் கண்டறியப்பட்டன. அவற்றின் தொன்மை கிமு 2 - 3ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாக அறியப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம் கட்ட அகழாய்வில் அங்கு மிகப்பெரும் சாயத் தொழிற்சாலை இருந்ததற்கான கட்டிடங்களும் கண்டறியப்பட்டன. இக்கண்டுபிடிப்பு உலக அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் கீழடி அகழாய்வின் பக்கம் உலக தொல்லியல் ஆய்வாளர்களின் பார்வை திரும்பியது. கீழடி கிராமத்தில் நடைபெற்ற ஆய்வின்போது பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் என அனைவரும் நாள்தோறும் பார்வையிடும் வண்ணம் சிறப்பான அனுமதியையும் அமர்நாத் ராமகிருஷ்ணன் வழங்கியிருந்தார். இதனால் கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியுலகிற்கு தொடர்ந்து தெரியத் தொடங்கின.

ஃபெட்னா நிகழ்வு  அமர்நாத்துக்கு அழைப்பு  மத்திய அரசு அனுமதிக்குமா  will govt allow amarnath  for fetna tamil function
மிகப்பெரும் சாயத் தொழிற்சாலை இருந்ததற்கானத் தடம்

மூன்றாம் கட்ட அகழாய்வு:

இந்நிலையில், 3ஆம் கட்ட அகழாய்வின்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் கீழடியில் பணியமர்த்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஃபெட்னா நிகழ்வு  அமர்நாத்துக்கு அழைப்பு  மத்திய அரசு அனுமதிக்குமா  will govt allow amarnath  for fetna tamil function
கீழடி அகழாய்வுப் பணிகள்

மறுக்கப்பட்ட அனுமதி:

தற்போது அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அமர்நாத் ராமகிருஷ்ணா, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க தமிழ்ச் சங்கமான ”ஃபெட்னா 2018” நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டார். அந்த நிகழ்வில் பங்கேற்க இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்தது. அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஃபெட்னா நிகழ்வு  அமர்நாத்துக்கு அழைப்பு  மத்திய அரசு அனுமதிக்குமா  will govt allow amarnath  for fetna tamil function
ஃபெட்னா 2019 அழைப்பிதழ்

அனுமதி வேண்டி கடிதம்:

இதற்கிடையே வருகின்ற ஜூலை 4, 5, 6, 7ஆம் தேதிகளில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் நடத்தவுள்ள 'ஃபெட்னா 2019' நிகழ்வில் 'கீழடி நம் தாய்மடி' என்ற தலைப்பில் காட்சியகம் ஒன்றை நடத்தவிருக்கின்றனர். இக்குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக ஃபெட்னா நிர்வாகிகள் அமர்நாத் ராமகிருஷ்ணாவிற்கு இந்தாண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்க இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரி அமர்நாத் ராமகிருஷ்ணா இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அனுமதித்தோ அல்லது அனுமதி மறுத்தோ எந்தவித பதிலும் தராமல் இழுத்தடித்து வருவதாக மத்திய தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஃபெட்னா நிகழ்வு  அமர்நாத்துக்கு அழைப்பு  மத்திய அரசு அனுமதிக்குமா  will govt allow amarnath  for fetna tamil function
அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு வந்த அழைப்பிதழ்

உலகத் தமிழர்ப் பார்வையில்:

இதுகுறித்து அமெரிக்கவாழ் ஃபெட்னா நிர்வாகிகளில் ஒருவரான கார்த்திக் என்பவரைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அவர் கூறியதாவது, 'கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணாவை 'ஃபெட்னா 2018' விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். ஏனோ அவரால் வர இயலவில்லை. இந்த ஆண்டு கீழடி ஆய்வு குறித்து 'கீழடி நம் தாய்மடி' எனும் தலைப்பில் சிறப்பு காட்சியகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதன் காரணமாக அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.

ஃபெட்னா நிகழ்வு  அமர்நாத்துக்கு அழைப்பு  மத்திய அரசு அனுமதிக்குமா  will govt allow amarnath  for fetna tamil function
அகழாய்வில் கிடைத்தப் பொருட்கள்
இதில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால், அமர்நாத் உறுதியாக பங்கேற்பார் என்று நாங்கள் நம்புகிறோம். காரணம் தமிழ்நாடு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்திற்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். ஆகையால் அவரிடமும் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். அமர்நாத் ராமகிருஷ்ணா பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியும் அளித்துள்ளார். இந்த முறை ஃபெட்னா நிகழ்ச்சியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு' என்றார்.
ஃபெட்னா நிகழ்வு  அமர்நாத்துக்கு அழைப்பு  மத்திய அரசு அனுமதிக்குமா  will govt allow amarnath  for fetna tamil function
பழமைவாய்ந்த மண் குடுவைகள்
கீழடி அகழாய்வுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உலகத் தமிழர்களிடம் அடையாளம் பெற்ற எழுத்தாளரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், வட அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராவார். மேலும், தற்போது தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் கீழடிக்காகவும், அமர்நாத் பணியிட மாற்றத்தை எதிர்த்தும் குரல் கொடுத்தவர்களாவர். ஆகையால் இந்த முறை வட அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் அமர்நாத் ராமகிருஷ்ணாவும் பங்கேற்க மத்திய பாஜக அரசுக்கு கண்டிப்பாக இவர்கள் அனைவரும் அழுத்தம் தருவார்கள் என்று தமிழ்நாடு தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Intro:Body:

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழக்குச் செலவாக 10 நாட்களுக்குள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கடந்த 2018 தீபாவளி பண்டிகையின் போது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும், 930 ஆம்புலன்ஸ்களும், 41 இருசக்கர ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படுவதாகவும், 4,750 ஊழியர்கள் இதில் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், போராட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.



பிரதான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, தொழில் தகராறு சட்டப்படியும், தமிழக அரசின் அரசாணையின்படியும், ஆம்புலன்ஸ் சேவை, பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பேச்சுவார்த்தை நடக்கும் போது ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடியாது எனக் கூறி, போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்தது.



மேலும், போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நலச் சங்கம் ஆகியவற்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை 10 நாட்களில் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.