ETV Bharat / city

காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனு!

author img

By

Published : Jan 24, 2021, 11:55 AM IST

மதுரை: காதல் மனைவியை சேர்த்து வைக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Madurai branch of High Court
Madurai branch of High Court

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "சிங்கப்பூர் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். தஞ்சாவூரைச் சேர்ந்த சிநேகா என்பவரும் நானும் காதலித்தோம். முதலில் எதிர்ப்பு தெரிவித்த சிநேகாவின் குடும்பத்தினர் பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், திடீரென சிநேகாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர்.

இதுகுறித்து சிங்கப்பூரில் இருந்த என்னிடம் சிநேகா தெரிவித்தார். கடந்த டிசம்பர் 13ஆம் தேதியன்று திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். தற்போது கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று என் மனைவியை மறைத்து வைத்துள்ளனர். இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால் கவுரவ கொலை செய்யும் அபாயம் உள்ளது. அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.

பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு என் மனைவி சிநேகாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: காதல் மனைவி பிரிந்ததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.