ETV Bharat / city

அலைமோதும் பார்வையாளர்கள்; காவல் துறை கட்டுப்பாட்டில் கீழடி...!

author img

By

Published : Oct 3, 2019, 3:21 PM IST

கீழடியில் அலைமோதும் பார்வையாளர்கள்

மதுரை: கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வின் நிறைவுப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வு நிறைவுப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அந்த இடத்தை பார்வையிடுவதற்காக நாள்தோறும் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் உள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் நாதன், கீழடியைக் காணவரும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கீழடியில் அலைமோதும் பார்வையாளர்கள்

அகழாய்வுப் பணிகள் நடைபெறும் முன்புற பகுதியிலுள்ள 32 குழிகளை மட்டுமே, பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் மற்றொரு பகுதிகளில் நடைபெறும் 22 குழிகளைப் பார்வையிடப் பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 30 நிமிடங்களுக்கு 100 பேர் வீதம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கீழடியில் பாதுகாப்புப் பணியில் மட்டும் 20 காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

Intro:பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையடுத்து கீழடியில் போலீசார் கட்டுப்பாடு

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வின் நிறைவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுBody:பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையடுத்து கீழடியில் போலீசார் கட்டுப்பாடு

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வின் நிறைவு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அந்த இடத்தை பார்வையிடுவதற்காக நாள்தோறும் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளனர்.

கூட்ட நெரிசல் காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் நாதன், கீழடியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அகழாய்வு பணிகள் நடைபெறும் முன்புற பகுதியிலுள்ள 32 குழிகளை மட்டுமே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்புறம் மற்றொரு பகுதிகளில் நடைபெறும் 22 குழிகளைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு மற்றும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று 30 நிமிடங்களுக்கு 100 பேர் வீதம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கீழடியில் பாதுகாப்பு பணியில் மட்டும் 20 காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.