மதுரையை சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தொடர்பாக வழங்கிய தீர்ப்பை கண்டித்து, கோரிப்பாளையம் தர்கா முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, ரஹமத்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசு குறித்து விமர்சன் செய்தனர். அதன்காரணமாக அவருடன் சேர்த்து எங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்தது மட்டுமே நாங்கள். அச்சுறுத்தும் விதமாக நாங்கள் பேசவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கும், நீதிமன்ற நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" குறிப்பிட்டிருந்தனர்.
ஜாமீன் வழங்கக்கூடாது: இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், நாங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததைத் தவிர, மத்திய அரசுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசுத் தரப்பில், பொதுயிடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதி இவர்கள் முறையாக பெறவில்லை. சட்டத்திற்கு புறம்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பிலிருந்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் அரசு வழக்கறிஞர் நியமனம் ரத்து... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...