ETV Bharat / city

மூன்று நாள்களாக கொட்டித்தீர்க்கும் மழை:அந்தியூர் - ஈரோடு பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

author img

By

Published : Oct 16, 2022, 3:49 PM IST

Etv Bharatமூன்று நாளாக கொட்டி தீர்க்கும் மழை - அந்தியூர் ஈரோடு பிரதான சாலை போக்குவரத்து துண்டிப்பு
Etv Bharatமூன்று நாளாக கொட்டி தீர்க்கும் மழை - அந்தியூர் ஈரோடு பிரதான சாலை போக்குவரத்து துண்டிப்பு

அந்தியூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் மூன்றாவது நாளாக கொட்டித்தீர்த்த கன மழையால் அந்தியூர் - ஈரோடு பிரதான சாலை போக்குவரத்தால் துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர் பிடிப்புப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நள்ளிரவு ஒரு மணி நிலவரப்படி சுமார் 3200 கன அடி தண்ணீர் வெளியேறி வந்தது.

இதற்கிடையில் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி ஆகியவை அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர் பிடிப்புப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அந்தியூர் - ஈரோடு பிரதான சாலையில் அண்ணா மடுவு என்ற இடத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தியூர் பெரியார் நகர், ஏ.எஸ்.எம் காலனி அழகர் நகர் ஆகிய குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தற்போது அப்பகுதிகளில் வரும் நீர் வரத்து காரணமாக இரண்டாவது நாளாக அந்தியூர், பவானி, ஈரோடு, மேட்டூர் சாலை முற்றிலும் போக்குவரத்தால் துண்டிக்கப்பட்டது.
இதேபோல அந்தியூர் விழித்திருப்போர் பிரதான சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மூன்று நாள்களாக கொட்டித்தீர்க்கும் மழை:அந்தியூர் - ஈரோடு பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் வரட்டுப்பள்ளம் அணை முதல் அண்ணா முடிவு பகுதி வரை நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இதுபோன்ற பிரச்னைகளுக்குத்தீர்வு ஏற்படும் எனத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளக்காடான ஈரோடு மாவட்டம்... மக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.