ETV Bharat / city

'கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டமா? - பாஜக

author img

By

Published : Dec 23, 2021, 6:36 AM IST

Updated : Dec 23, 2021, 11:08 AM IST

அறநிலையத் துறையில் கிறிப்டோக்கள் ஆதிக்கத்தின் வெளிப்பாடு - சிறிய ஹெச்.ராஜா
அறநிலையத் துறையில் கிறிப்டோக்கள் ஆதிக்கத்தின் வெளிப்பாடு - சிறிய ஹெச்.ராஜா

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை செயல் அலுவலர் கோயிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரோடு:வாரணாசியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட காசி விஸ்வநாதர் கோயிலை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி (டிச.13) நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்வைக்காக ஒளிபரப்பு செய்யும் வகையில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் மண்டபத்தில் பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாஜக மாநில விவசாய அணித் தலைவர் நாகராஜ் தலைமையில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளே சென்றவர்கள் கோயில் வளாகத்தில் ஒளிபரப்பு செய்ய முயன்றனர். இதற்குக் கோயில் செயல் அலுவலர் ரமேஷ் மறுத்துள்ளார்.

இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் செயல் அலுவலர் உடன் வாக்குவாதத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதனை அடுத்து நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய முன் அனுமதி பெறாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதி மறுத்த செயல் அலுவலர்

மேலும், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை மடிக்கணினி மூலம் கோயில் வளாகத்திற்குள் வைத்து பாஜகவினர் கண்டுகளித்தனர். அதனைத் தொடர்ந்து உதவி காவல் கண்காணிப்பாளர் கௌதம் பாஜகவினர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி இல்லாததால் வெளியே செல்லுமாறு கூறினர். இதனால் அனைவரும் கோவில் வளாகத்திலிருந்து வெளியேறினர்.

ஈரோடு கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ரமேஷ்
ஈரோடு கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ரமேஷ்

இது குறித்து, பாஜக மாநில விவசாய அணித் தலைவர் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரசியல் சார்பு இல்லாமல் அனைத்து கோயில்களிலும் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார். நான்கு நாட்கள் தொலைபேசியில் பேசிய பின்பும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுத்துள்ளார்.

ஈரோடு கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ரமேஷ்
ஈரோடு கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ரமேஷ்

இந்து மத விரோத செயல்

கோயில் செயல் அலுவலர் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் பொதுமக்களுக்கும் மரியாதை கொடுக்கவில்லை. நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்ற ஆணையைக் கேட்டால் ஆணையைக் காட்ட மறுக்கிறார். மேலும் ஆணையரிடம், அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொடர்பை எடுக்க மறுக்கிறார். திமுக தொடர்ந்து இந்து மத விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது.

நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்ற அதிகாரத்தை யார் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என மறுத்த சம்பவம் குறித்து அறநிலை துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்படும். குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகச் செயல்படும் அரசை ஏற்றுக்கொள்ள முடியாது கண்டனத்துக்குரியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப மறுத்த கோயில் நிர்வாகத்தின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்" என்றார்.

  • கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை செயல் அலுவலர் கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது கோவிலின் புனிதத்தை கெடுக்கும் திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகம். இவர் மீது துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத் துறையில் கிறிப்டோக்கள் ஆதிக்கத்தின் வெளிப்பாடு. pic.twitter.com/KzhS5ynr31

    — H Raja (@HRajaBJP) December 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆதிக்கத்தின் வெளிப்பாடு

இந்நிலையில் செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, "தனது ட்விட்டர் பக்கத்தில், "கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை செயல் அலுவலர் கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது கோவிலின் புனிதத்தை கெடுக்கும் திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகம் என்று தெரிவித்துள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அறநிலையத் துறையில் கிறிப்டோக்கள் ஆதிக்கத்தின் வெளிப்பாடு" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கள்ளச்சாராயத்துக்கு கதர் வாரியம், கட்டப்பஞ்சாயத்துக்கு அறநிலை, நீர் தராதவருக்கு நீர்வளம்!'

Last Updated :Dec 23, 2021, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.