மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

author img

By

Published : Aug 23, 2021, 6:52 PM IST

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே விவசாயப்பகுதியில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி, தலைமறைவான விவசாயியை காவலர்கள் தேடிவருகின்றனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், விளாமுண்டி, கடம்பூர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என். பாளையம், ஜுர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மின்வேலியில் சிக்கிய யானை

இந்த விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜோராஓசூர் கிராமத்தில் விவசாயி ஜேம்ஸ் (65) என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டடிருந்த மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்தது.

விவசாயப்பகுதியில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு
விவசாயப்பகுதியில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

விவசாயி தலைமறைவு

இதுகுறித்து ஜுர்கள்ளி வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது 30 வயதுடைய மக்னா யானை உணவுதேடி வந்தபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. தலைமறைவான விவசாயியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நகைக் கடையில் தீ விபத்து - ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.