ETV Bharat / city

உதகைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Apr 24, 2022, 7:19 AM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உதகை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இதையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

கோவை: உதகையில் வரும் 25, 26ஆம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (ஏப்.23) சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு ஆளுநர் கே.என்.ரவி கோவை வந்தடைந்தார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் ஆளுநர் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக போலீஸ் பாதுகாப்புடன் ஆளுநர் ஆர்.என். ரவி உதகை கிளம்பினார். ஆளுநர் வருகையினை முன்னிட்டு விமான நிலைய வாளாகம் மற்றும் விமான நிலையம் செல்லும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விமான நிலையத்திற்கு கறுப்பு சட்டை அணிந்து வந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்திய பின்பே போலீசார் அனுமதித்தனர். தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு

இந்த நிலையில் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அனைத்து முற்போக்கு இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் முதல்முறை...உதகையில் புதிய நுண்ணுயிரியைக் கண்டுபிடித்த மாணவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.