ETV Bharat / city

கோவையில் உணவு பூங்கா அமைக்க இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கை!

author img

By

Published : Sep 4, 2019, 12:44 PM IST

இந்திய தொழில் கூட்டமைப்பு

கோவை: பொள்ளாச்சியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் வீணாகாமல் தடுக்க உணவு பூங்காவை மத்திய அரசு அமைத்து தர வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் வரதராஜன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "இந்தியாவில் மொத்த உணவுப் பொருள் உற்பத்தியில் 38 விழுக்காடு உபயோகிக்காமல் வீணாக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 28 விழுக்காடு மட்டும் தான் உணவுப்பொருள் வீணாக கொட்டபடுகிறது.

அதை குறைக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருள் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம், இதன் ஒரு பகுதியாக வேளாண் பகுதியை அதிகம் கொண்ட பொள்ளாச்சியில் தேங்காய், தக்காளி காய்கறிகள், நீரா பானம் போன்றவை உற்பத்தி இருந்தும் சில நேரங்களில் சந்தைப்படுத்த முடியாமல் கழிவாக வீசப்படுகிறது.

இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் வரதராஜன் பேட்டி

இதனால் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் எதிர்வரும் 9ஆம் தேதி நடத்தப் படவுள்ளது. இந்த கருத்தரங்கில் உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உணவுப் பொருள் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் இதையடுத்து பொள்ளாச்சியில் உணவு பூங்கா அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தவுள்ளோம்" என தெரிவித்தனர்.

Intro:chamberBody:chamberConclusion:விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை வீணாகாமல் தடுக்க பொள்ளாச்சியில் உணவு பூங்கா அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

பொள்ளாச்சி -செப்- 3

மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் வருகிற 9ம் தேதி பொள்ளாச்சியில் உணவுப்பொருட்கள் பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் சம்மதமான கருத்தரங்கம் நடைபெறுகிறது, இந்த கருத்தரங்குகள் குறித்து பொள்ளாச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் வரதராஜன் மற்றும் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபால கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது இந்தியாவில் மொத்த உணவுப்பொருள் உற்பத்தியில் 38 விழுக்காடு உணவுப்பொருட்கள் கழிவாக உள்ளதாகவும், இதில் தமிழகத்தில் 28 விழுக்காடு உணவு பொருள் கழிவாக கொட்டபடுவதாகவும் தெரிவித்த அவர், இந்த உணவு பொருள் கழிவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் சம்பந்தமாக உணவுப்பொருள் உற்பத்தியாளர்களுக்கு விவசாயிகளுக்கும் அறிவுறுத்தி வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக வேளாண் பகுதியை அதிகம் கொண்ட பொள்ளாச்சியில் தேங்காய், தக்காளி காய்கறிகள், நீரா பானம் போன்றவை உற்பத்தி இருந்தும் சில நேரங்களில் சந்தைப்படுத்த முடியாமல் கழிவாக வீசப் படுவதாகவும், இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவது அதை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் உணவு பொருட்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடத்தப்படுவதாகவும் இந்த கருத்தரங்கில் உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்கள்,முதலீட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு உணவுப்பொருள் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும், இதனால் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும், இதனடிப்படையில் பொள்ளாச்சி உணவு பூங்கா அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் வரதராஜன் தெரிவித்தார்.

பேட்டி - வரதராஜன், தலைவர் இந்திய தொழில் கூட்டமைப்பு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.